கங்குவா லாபமா?நஷ்டமா? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்..!
கங்குவா திரைப்படம் லாபமா? நஷ்டமா? என்பதை குறித்து பேசி உள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்று சொல்லலாம். இதனால் திரைப்படம் லாபமா?நஷ்டமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
அது குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, கங்குவா வெளியாகும் முன்பே OTT மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்துவிட்டது.கங்குவா தோல்வி படமாக இருந்தாலும் அது படத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
