Pushpa 2

என் வருங்கால கணவர் யார் தெரியுமா?: ராஷ்மிகா ஓபன் டாக்..

‘எனது காதலரும் வருங்கால கணவருமானவர் இவர்தான்’ என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யார் அவரென அது குறித்துப் பார்ப்போம்..

புஷ்பா பட மெகா ஹிட்டை அடுத்து, அப்படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராகி இருக்கிறது. இப்படம், வருகிற டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸாக உள்ளது.

படத்தை பான் இந்தியா அளவில் புரமோட் செய்யும் பணியில் படக்குழுவினர் செம பிசியாக உள்ளனர். அவ்வகையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இதில், நாயகன் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகாவிடம், உங்களின் வருங்கால கணவர் யார்? அவர் திரைத்துறையை சேர்ந்தவரா? என தொகுப்பாளினி அஞ்சனா கேட்டார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா,

‘இதற்கான பதில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்’ என்றார். அனைவரும் ஷாக் ஆகினர்.ஏனெனில், நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலிப்பதாக பல ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டாலும், இதுவரை எந்த மேடையிலும் அதுபற்றி வெளிப்படையாக பேசாத ராஷ்மிகா, தற்போது முதன்முறையாக சென்னையில் நடைபெற்ற புஷ்பா 2 பட விழாவில், அதுபற்றி பேசி இருப்பது இணையத்தில் வைரலாய் பரவி வருகிறது.

இந்நிலையில், ராஷ்மிகாவின் இதயம் மலர்ந்த பேச்சு குறித்து, விஜய் தேவரகொண்டா பதில் அளிப்பாரா? என நெட்டிசன்கள் ஆவலாய் அங்கலாய்த்து வருகின்றனர்.

rashmika mandann reveals her lover in pushpa 2 chennai event
rashmika mandann reveals her lover in pushpa 2 chennai event