‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?
‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்..
‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து
படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால், அவரை நீக்கிவிட்டு வேறு இசையமைப்பாளரை கமிட் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அவ்வகையில், தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அனிருத் ஏற்கனவே கைவசம் பல படங்களை வைத்திருப்பதாலும் மிகவும் பிசியாக இருப்பதாலும் ‘அடுத்தொரு படத்தில் இணைவோம்’ என கூறிவிட்டார். இதனால், தற்போது ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘குட் பேட் அக்லி’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், முன்னதாக இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ என்கிற ஹிட் படத்திற்கு ஜி.வி. இசையமைத்து இருந்தார்.
அதுமட்டுமின்றி, ஆதிக்கின் நெருங்கிய நண்பர் என்பதால் நெருக்கடியான இச்சூழலில் இசையமைக்க சம்மதித்துள்ளார்.
இதன்மூலம், நடிகர் அஜித்துடன் 17ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். முன்னதாக, அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த ‘கிரீடம்’ படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ, ‘தல’ படத்துல தெறிக்கிற இசை, ரசிகர்களை திருப்திபடுத்துனா சரி..!