நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார்.
முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது.
இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து வருகின்றனர்.
இச்சூழலில், இயக்குநர் நெல்சன் கூறியதாவது: ‘ஒருமுறை அல்லு அர்ஜூன் சாரைச் சந்திக்க போயிருந்தேன். அப்போது அவரிடம் பேசும்போது, ஷாக் ஆகி விட்டேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் கொஞ்சங்கூட தடங்கல் இல்லாமல் நன்றாக தமிழ் பேசினார்.
அல்லு அர்ஜுன் சார் நேரடியாக தமிழில் படம் நடிக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். அதற்கான காலம் வரும். அதுவும் அவரே தமிழ் பேசி நடிக்கவேண்டும். வேறு யாரும் டப் செய்யக் கூடாது எனவும், எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதேபோல் ஹிந்தியிலும், மலையாளத்திலும் என அவரே நேரடியாக பேசி நடிக்க வேண்டும்’ என்றார்.
‘இயக்குனர் நெல்சன் பேசிய பேச்சிலிருந்து, அல்லு அர்ஜூன் நெல்சன் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார்’ என ரசிகர்கள் தரப்பில் பேச்சு எழுந்துள்ளது.
அல்லு அர்ஜூன் இது குறித்து பதில் அளிக்கும் பொருட்டு பேசும்போது, ‘ரசிகர்கள் அவரை தெலுங்கில் பேசச் சொன்னார்கள். ஆனால், அவரோ நான் தமிழ் மண்ணின் மீது நிற்கின்றேன். அதனால், நான் தமிழில்தான் பேசுவேன்.
எனக்கு தமிழ் தெரியும்போது தமிழ் மண்ணில் இருந்து கொண்டு என்னால், தெலுங்கில் பேசமுடியாது. தமிழில்தான் பேசுவேன் எனக் கூறியது ரசிகர்களின் பலத்த கைத்தட்டலால் எட்டுத்திசையும் அதிர்ந்தது.