Web Ads

The First Roar : விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியான கிளிம்ஸ் வீடியோ இதோ..!

ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

Glims video released as Vijay's birthday special
Glims video released as Vijay’s birthday special

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், H.வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி 12:00 AM மணிக்கு இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதேபோல் இன்று விஜயின் பிறந்தநாள் என்பதால் இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜய்யின் வசனத்துடன் ஆரம்பித்து போலீஸ் கெட்டப்பில் மிரட்டலான லுக்கின் கையில் ரத்தம் சுட்ட சொட்ட விஜய் இருக்கும் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.