தனுஷ் மற்றும் அமீர்கான் நடித்த படங்கள் கலெக்சன்
‘குபேரா’ மற்றும் ‘சிதாரே ஜமீன் பர்’ படங்களின் வசூல் பற்றிப் பார்ப்போம்..
தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்துடன் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர்.
இப்படத்தில், அமீர்கான் ஹீரோவா நடிக்க, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கான் ஜோடியாக ஜெனிலியா இணைந்துள்ளார்.
தனுஷின் ‘குபேரா’ படத்தைப் போல அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். இதனால், இப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
அமீர்கான் கடைசியாக நடித்த ‘லால் சிங் சத்தா’ படம் தோல்வியை சந்தித்தது. இதனால், கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமீர்கான், தேர்வு செய்து நடித்த படம் ‘சிதாரே ஜமீன் பர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார் அமீர்கான். அவர் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்ள, அவரை மனநலம் பாதித்த குழந்தைகளுக்கு கூடைப்பந்து பயிற்சியளிக்க நீதிபதி உத்தரவிடுகிறார். இதையடுத்து அமீர்கான் என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.
உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் ஆங்காங்கே நகைச்சுவைக் காட்சிகளும் உள்ளன.
அமீர்கானுக்கு கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
வசூலில், குபேராவை விட குறைவு. ‘குபேரா’ படம் இந்தியாவில் மட்டும் ரூ.13.5 கோடி வசூலித்துள்ளது. ‘குபேரா’ படத்திற்கு தமிழ்நாட்டை காட்டிலும் தெலுங்கு மாநிலங்களில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
‘சிதாரே ஜமீன் பர்’ படம் இந்தி பதிப்பின் வாயிலாக மட்டும் ரூ.11.5 கோடி வசூலித்துள்ளது. ஆனால், இதன் தெலுங்கு பதிப்பு 15 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.