சந்தானத்தின் “லவ் பைட்” படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

Web Ads

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘லவ் பைட்’ உருவாகி வருகிறது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார்.

மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Web Ad 2

நகைச்சுவை கலந்த சர்வைவல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் மீண்டும் வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 29வது தயாரிப்பாக உருவாகும் ‘லவ் பைட்’ படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.