இயக்குனர் ஷங்கரால் கேம் சேஞ்சர் படத்திற்கு வந்த சிக்கல். லைகா நிறுவனம் எடுத்த முடிவு!!
கேம் சேஞ்சர் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர்.இவர் இயக்கும் படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கொடுக்காமல் நஷ்டத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.
அதனைத் தொடர்ந்து தற்போது இவரது இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராம்சரண் நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் தற்போது இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது லைகா நிறுவனம் இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று புகார் கொடுத்துள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்தியன் 3 படத்திற்கு 65 கோடி பட்ஜெட் ஷங்கர் கேட்டுள்ளார் ஆனால் இந்தியன் 2 படத்தின் நஷ்டம் காரணமாக தயாரிப்பு நிறுவனம் கொடுக்க மறுத்துள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் சுமுகமாக முடியாத நிலையில் தமிழ்நாட்டின் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்க ஒப்பந்தம் இன்னும் தொடங்கவில்லை. இந்தத் தகவலை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.