விடாமுயற்சியை விடுங்க.. குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி பட குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணத்தால் ரிலீஸ் செய்தியை தள்ளி வைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டில் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பதை பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#GoodBadUgly arrives on April 10th❤️🙏🏻 @MythriOfficial @SureshChandraa pic.twitter.com/K6N1x7uANT
— Adhik Ravichandran (@Adhikravi) January 6, 2025