இப்படியொரு வரவேற்பு வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: இயக்குனர் சுந்தர்.சி
‘மத கஜ ராஜா’ படம் குறித்து, சுந்தர்.சி பகிர்ந்த அவரது மகிழ்வான மனநிலையை பார்ப்போம்..
அன்று சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்து உருவான திரைப்படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது:
‘இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த ‘மத கஜ ராஜா’ இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது இருந்த ரசிகர்கள் வேறு, அவர்களது மனநிலை வேறு, இப்போது இருக்கும் ரசிகர்கள், அவர்களுடைய மனநிலை வேறு.
ஏனென்றால், சோஷியல் மீடியாவில் கலாய்ப்பார்கள் என்று நான் பயந்தேன். ஆனால், இப்போது படத்தை பார்த்த பிறகு இப்படி ஒரு வரவேற்பு வரும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்த வரவேற்பை பார்த்த பிறகு, படக்குழுவினர் ரொம்பவே ஹேப்பி ஆகியிட்டோம். எனினும், படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
படத்தை பற்றி அறிவிப்பு வந்ததுக்கு பிறகு, வலைதளங்களில் நல்லாவே ரெஸ்பான்ஸ் இருக்கு. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரொம்பவே ஜாஸ்தியாயிடுச்சு.
‘மதகஜராஜா’ படத்தில் மணிவண்ணன், மனோபாலா நடிச்சிருக்காங்க. ஆனால், அவங்க யாரும் இப்போது நம் கூட இல்லை. நானும், விஜய் ஆண்டனியும் இப்போது தான் இணைந்திருக்கிறோம். மியூசிக்கும் நல்லா வந்திருக்கு.
விஷால் இந்த படத்துக்காக கடுமையாக உழைச்சிருக்காரு. அவருக்காக இந்தப் படம் வெளிவர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது 12 வருஷத்துக்கு பிறகு இந்தப் படம் வருது’ என கலகலப்பாய் பகிர்ந்து கொண்டார் சுந்தர்.சி.