காதல் படங்கள் தான் அதிகம் தேர்வு செய்வேன்.. ஆனால்? வெற்றிமாறன் ஓபன் டாக்..!
வெற்றிமாறனின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகியுள்ளது.

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வெற்றிமாறன் சினிமா பயணம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது ஒரு படத்தை எடுக்க முடிவு எவ்வளவு காலமாகும் என்பதை இயக்குனரை தவிர வேறு யாராலும் தீர்மானிக்க முடியாது என்றும் தீர்மானிக்கவும் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் ஒரு பெண் இயக்குனர் என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வந்தார் அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன் என்னை பார்த்த போதே இருந்தது என்றும் கூறியுள்ளார். சினிமாவில் பெண்கள் அதிகரிப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நான் வன்முறை படங்களை காட்டிலும், காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன் ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக உள்ளது அதனால் தான் காதல் படங்கள் கைக்கூடாமல் போய் வருகிறது என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
