பிக் பாஸ் வீட்டில் சிவகார்த்திகேயன், போட்டியாளர்கள் வாழ்த்து..வெளியன மூன்றாவது ப்ரோமோ..!
சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நூல் விட ரெடியா என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் அணி பெண்கள் அணி இருவரும் தனித்தனியாக விளையாட பெண்கள் அணி ஜெய்கின்றனர்.
முதல் ப்ரோமோவில் பெண்கள் அணி ஜெயித்ததினால் அவர்களில் ஒருவர் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் அவரவர் விருப்பங்களை சொல்கின்றனர்
அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்கு அமரன் படத்தின் ப்ரோமோஷன் காக சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் சிறிது நேரம் பேச, போட்டியாளர்கள் அமரன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram