Pushpa 2

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, ஜெனி கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்கு ஜெனி பதிலடி கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 03-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 03-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாரில் குடித்துக்கொண்டு செந்திலிடம் நடந்து விஷயங்களை சொல்லி கண் கலங்குகிறார் என்ன வேணான்னு ராதிகா முடிவு எடுத்துட்டா என்னோட குடும்பம் சொந்தக்காரங்க எல்லாரையும் பகச்சிக்கிட்டு நான் ராதிகா கழுத்துல தாலி கட்டின இதுக்காகவா என்று குடித்துக் கொண்டே இருக்க அவரது நண்பர் செந்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்திருக்கலாம் நீங்க இதுக்கு முன்னாடியும் சண்டை போட்டுட்டு சேர்ந்து இருக்கீங்களா அது மாதிரி நடக்கும் என்று சொல்லுகிறார்.

ஆனால் கோபி நீ அவ வீட்ல இருக்குறவங்க கிட்ட பேசிட்டு போனத பாக்கல எல்லார்கிட்டயும் அவ்வளவு அமைதியா மன்னிப்பு கேட்டுட்டு இனிமே பாக்கவே முடியாது என்கிற மாதிரி தான் பேசிட்டு போனா என்று சொல்லுகிறார் எனக்கு ராதிகா நான் டவுனா இருக்குற நேரத்துல தூக்கி நிறுத்திருக்கிறார் அவ இல்லனா நான் ஜீரோ தான் ராதிகா எனக்கு ரொம்ப முக்கியம் என்னோட உயிர் மாதிரி என்றெல்லாம் பேசி கண் கலங்க அவரது நண்பர் ஆறுதல் சொல்லுகிறார்.

ஹாலில் ஈஸ்வரி மற்றும் இனியா உட்கார்ந்து கொண்டிருக்கார் ஜெனி அவர்களை சாப்பிட கூப்பிடுகிறார் எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன் என்று ஈஸ்வரி சொல்ல நீங்க டேப்லெட் போடணும் பாட்டி சாப்பிடுங்க என்று ஜெனி சொல்ல வேண்டாம் என சொல்லுகிறார் இனியாவை கூப்பிட இனியாவும் அம்மா வந்ததுக்கப்புறம் சாப்பிட்டு கிரேன் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து செழியன் வந்து உட்காருகிறார் செழியன் இடம் நீயாவது வருவியா இல்ல நீயும் ஏதாவது சொல்லப் போறியா என்று கேட்க உடனே ஈஸ்வரி மரியாதை இல்லாம இப்படி தான் பேசுவியா என்று கேட்க நான் என்ன தப்பா கேட்டுட்டேன் என்று ஜெனி கேட்கிறார். உன் மாமியார் மாதிரி பேசாத அவ என்ன சீரியல்ல காமிக்கிற வில்லி மாதிரி பேசிட்டு போறா எல்லாரோட வாழ்க்கையும் நான் தான் கெடுக்குறேனா எனக்கு நரகம் கிடைக்குமா அப்படி எல்லாம் பேசுறா என்று சொல்ல அம்மா அந்த அர்த்தத்துல சொல்லல பாட்டி என்று செழியன் சொல்லுகிறார்.

அப்போ அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சொல்ல ஜெனி ஆன்ட்டி சொன்னதுல எந்த தப்பும் கிடையாது அங்கிள் எடுக்கிற முடிவு அவரே எடுக்கட்டும் நீங்க அவர பொத்தி பொத்தி வைக்க வேண்டான்னு தான் சொல்றாங்க என்று சொல்ல எனக்கு இருக்கிறது ஒரே பையன் அவன் வாழ்க்கையில நான் தலையிடக்கூடாதா என்று ஈஸ்வரி சொல்லுகிறார். ஆனால் ஜெனி அங்கிள் அவரோட வாழ்க்கையில எடுக்கிற முடிவு அவரே எடுக்கட்டும் என்று தான் ஆன்ட்டி சொன்னாங்க அவங்க பேசுனதுல எந்த தப்பும் இல்லை என்று சொல்லுகிறார். அங்கிள் கூடவே இருக்கீங்க அவர் என்ன தப்பு பண்ணினாலும் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க என்று சொல்லுகிறார் ஜெனி. நீயும் ஒரு குழந்தையை பெத்து வச்சிருக்க இன்னொரு குழந்தையை பெத்துக்க போற நீ வளக்கும்போது தான் அப்படி தெரியும் என்று சொல்ல நீங்க தப்பா நினைச்சுக்கினாலும் பரவால்ல நான் உங்களை மாதிரி வளர்க்க மாட்டேன் என்று சொல்ல செழியன் உள்ளே போக சொல்லி அனுப்பி விடுகிறார்.

ரூமில் ஜெனி கோபமாக உட்காருந்து கொண்டிருக்க என்ன ஜெனி கோவமா இருக்கியா என்று கேட்கிறார். ஆமா நீ எதுக்கு உள்ள போக சொன்ன என்று கேட்க அதற்கு செழியன் அவங்களோட பாயிண்ட் ஆஃப் யூ ல இருந்து பார்த்தா பாட்டி சொல்றதும் கரெக்ட் தானே என்று சொல்லுகிறார் அப்ப ஆன்ட்டி சொல்றது தப்புன்னு சொல்றியா என்று கேட்க அவங்க இவ்வளவு நாள் எதுவுமே பேசாம இருந்தாங்க ஆனா அவங்க பேசினா போல அவ்வளவு சந்தோஷப்பட்ட என்று சொல்லுகிறார். அம்மாவோட சூழ்நிலை வேற இவங்களோட சூழ்நிலை வேலை என்று சொல்லுகிறார் எந்த ஒரு பையன் தப்பு பண்ணினாலும் அவங்க அம்மாதான் சப்போர்ட் பண்ணுவாங்க அதனாலதான் பாட்டியும் அப்படி பண்ணாம என்று சொல்ல அதற்கு ஜெனி ஆன்ட்டி அப்படி பண்ணலையே என்று கேட்கிறார்.

நீ ஒரு பொண்ணு கூட தப்பான சகவாசத்துல இருந்தபோது ஆன்ட்டி உனக்கு சப்போர்ட் பண்ணலையே எந்த பக்கம் நியாயம் இருக்கோ அங்க தான் நின்னாங்க ஆன்ட்டி எனக்கு தான் சப்போர்ட் பண்ணாங்க அப்படி இருக்கும்போது நீ இப்படி பேசுறது ரொம்ப தப்பு என்று செழியன் வாயை அடைத்து விட்டு சென்று விடுகிறார் ஜெனி.

ஈஸ்வரி கோபிக்காக காத்துக் கொண்டிருக்க பாக்யா கிச்சனிலிருந்து வந்து நீங்க போய் தூங்குங்க என்று சொல்ல எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க ஈஸ்வரி எழுந்திருக்க உட்காருங்க நான் திறக்கிறேன் என்று சொல்லி பாக்யா கதவை திறக்க குடிபோதையில் கோபி சரிகிறார்.

உடனே பதறிப்போன ஈஸ்வரி கோபியை பிடிக்க போக வேண்டாமா நானே வந்திடுவேன் என்று சொல்லி தட்டு தருமாறு கீழே விழுந்து சோபாவில் உட்காருகிறார். ஈஸ்வரி என்னடா இதெல்லாம் என்று சொல்லிவிட்டு கோபமாக ரூமுக்கு செல்ல கோபி பாக்யாவை நிற்கச்சொல்லி ராதிகா என்னை விட்டு போயிட்டா அவளுக்கு இனிமேல் நான் வேணாமா என்ன புடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டா என்று சொல்லி புலம்ப பாக்கியா கிச்சனுக்கு சென்று விடுகிறார். மறுபக்கம் ஈஸ்வரி என் புள்ளைய அவ வேணான்னு துரத்துறாங்க எங்கேயும் வேணான்னு துரத்துறாங்க ஆனா நான் அப்படி இருக்க முடியாது என்று தானாக புலம்பி கொண்டிருப்பதை பார்த்து பாக்யா சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வர என்ன பேசுகிறார்?அதற்கு ராதிகாவின் அம்மா பதில் என்ன சொல்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 03-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 03-02-25