
ஸ்ருதி இல்லாமல் பதற்றத்தில் ரவி.. ஸ்ருதியை கண்டுபிடிப்பார்களா முத்து, மீனா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
ஸ்ருதி இல்லாமல் ரவி பதற்றத்தில் இருக்க முத்துவும் மீனாவும் ஸ்ருதியை கண்டுபிடித்தார்களா என்பதை குறித்து பார்க்கலாம்.

siragadikka asai serial today episode update 03-02-2025
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாண நாள் விழாவிற்கு அனைவரும் வர வாசலில் நின்று ரவி வரவேற்கிறார். கொஞ்ச நேரம் கழித்து முத்துவின் நண்பன் செல்வம் வர ஏன் ரவி சோகமா இருக்க என்று கேட்கிறார். அதெல்லாம் முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துருவாங்க முத்து எல்லா விஷயத்தையும் சொன்னா நீ தைரியமா இரு உனக்கு சப்போர்ட் பண்ண தான் அனுப்பி இருக்கான் என்று சொல்லி தைரியம் சொல்ல எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.
உடனே செல்வம் அதெல்லாம் ஒன்னும் ஆகாது கூட்டிட்டு வந்துருவாங்க வா நம்ம உள்ளே போய் ஆக வேண்டியதை பார்க்கலாம் என்று சொல்ல ரவி எல்லாரும் வந்துட்டாங்க இன்னும் சுருதி வரலையா என்று கேட்க சரி டான்ஸ் ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணுங்க அவ வந்துருவா என்று சொல்லி சமாளிக்கிறார். உடனே விஜயா அவர்களின் பரதநாட்டியம் கிளாஸில் இருக்கும் பசங்களை ஆட சொல்லுகிறார். நாங்க பிராக்டிஸ் பண்ணல மாஸ்டர் என்று சொல்ல பரதநாட்டியம் எல்லாம் ஆட சொல்லல நீங்க வேற ஏதாவது பாட்டுக்கு கூட ஆடுங்க என்று சொல்ல அவர்கள் சந்தோஷமாக டான்ஸ் ஆடி என்டர்டைமென்ட் செய்கின்றனர்.
விஜயாவை டான்ஸ் ஆட சொல்ல அதற்கு அவர் ஸ்ருதி வந்த பிறகு ஆடுகிறேன் என்று சொல்லுகிறார். ஆனால் ரவி இல்லமா நீங்க இப்பவே ஆடுங்க டைம் ஆயிடும் என்று சொல்ல விஜயாவை ஆட வைக்கின்றனர். விஜயா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பா ஸ்ருதியின் அம்மாவிடம் இந்த பொம்பளைக்கு இந்த வயசுல இது தேவையா என்று பேசிக்கொண்டிருக்க பக்கத்திலிருந்து அண்ணாமலை இடம் அவர் உங்க வைஃப் கிட்ட இருக்குற திறமையை வச்சு சம்பாதிச்சு பெரிய ஆளா இருக்கலாமே என்று சொல்ல அதற்கு அண்ணாமலை அவளுக்கு இருக்கிறது திறமை அத வச்சு காசு சம்பாதிக்கணும்னு எனக்கு அவசியம் கிடையாது நான் நேர்மையா சம்பாதிச்ச காசுல என் குடும்பத்தை நல்லா தான் பாத்துக்கிட்டேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுருதியை டப்பிங் ஸ்டுடியோவில் வந்து விசாரிக்க அவர் லீவ் கேட்டு சென்று விட்டதாக சொல்லுகின்றனர். இன்னொரு ஸ்டூடியோ ஏதாவது பேசுவாங்களா என்று கேட்க இன்னொன்னும் பேசுவாங்க என்று சொல்லி அந்த அட்ரஸ் கொடுக்கின்றனர் முத்துவும் மீனாவும் அங்கு சென்று பார்க்கலாம் என்று முடிவெடுத்து போகின்றனர்.
விஜயா டான்ஸ் ஆடி முடித்த பிறகு வந்துவிட என்னமா அதுக்குள்ள முடிச்சிட்டிங்க என்று ரவி கேட்கிறார். எனக்கு இதுவே டயர்டா இருக்கு அவ்வளவுதான் இன்னும் எவ்வளவு நேரம் ஆட முடியும் என்று சொல்ல உடனே பார்வதி ஆன்ட்டி இருக்காங்கல்ல அவங்க கூட ஆடுங்க என்று சொல்லுகிறார். உடனே பார்வதி எனக்கு அவ்வளவு எல்லாம் டான்ஸ் ஆட வராது என்று சொல்ல இங்க என்ன காம்பெடிஷன் ஆன்ட்டி நடக்குது நீங்க ஜாலியா ஆடுங்க என்று சொல்லி வற்புறுத்துகிறார். சரி அவர்களும் ஆட மேடைக்கு வேற விஜயா ஸ்ருதியின் அம்மா அப்பாவை பார்த்து டென்ஷன் ஆக இருப்பதை கவனித்து ஸ்ருதியின் அம்மாவையும் டான்ஸ் ஆட கூப்பிடுகிறார் முதலில் மறுக்க விஜயா வற்புறுத்தி கூப்பிட்டு அவர்களையும் டான்ஸ் ஆட வைக்க உடனே அண்ணாமலை ஸ்ருதியின் அப்பாவிடம் உங்க வைஃப் கூட டான்ஸ் நல்லா ஆடுறாங்க நீங்க அவங்க திறமையை வச்சு இன்னும் பெரிய ஆளா இருக்கலாமே என்று நோஸ் கட் கொடுக்கிறார். ஆனால் ரவி ஸ்ருதி வராமல் இருப்பதால் டென்ஷனாகவே இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் வெளியில் வந்து மீண்டும் ஸ்ருதிக்கு போன் போட சுருதி எடுக்காமல் இருக்கிறார்.
செல்வம் முத்துக்கு ஃபோன் போட்டு கேளுப்பா என்று சொன்ன ரவி போன் போடுகிறார். போனை எடுத்த முத்து சுருதியை டப்பிங் ஸ்டுடியோவில் விசாரித்ததாகவும் அங்கு வரவில்லை என்று சொல்லிவிட்டதாக சொல்லுகிறார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு முத்து நான் அம்மாவை ஆடவைத்து சமாளிச்சு கிட்டு இருக்கேன் என்று சொல்ல நாங்கள் சுருதியோட தான் வருவோம் பயப்படாதீங்க என்று மீனா ஆறுதல் சொல்லுகிறார். ரவி போனை வைக்க முத்துவும் மீனாவும் இன்னொரு டப்பிங் ஸ்டூடியோவில் சென்று சுருதியை கேட்க பேசி முடித்துவிட்டு கிளம்பி விட்டதாக சொல்லுகின்றனர் எங்க போனாங்கன்னு ஏதாவது தெரியுமா என்று கேட்க வக்கீல் பாக்குறதுக்கு நம்பர் வாங்கிட்டு போய் இருக்காங்க என்று சொல்ல அந்த வக்கீல் எங்கே இருக்கிறார்கள் என்பதை விசாரித்து இவர்கள் இருவரும் அங்கு செய்கின்றனர்.
மறுபக்கம் விஜயா பார்வதி மற்றும் சுருதியின் அம்மா மூவரும் ஆடி ஆடி ஒரு கட்டத்திற்கு மேல் டயர்ட் ஆகி டான்ஸ் நிறுத்தி விடுகின்றனர் உடனே ரவி அண்ணாமலை இடம் நீங்க போய் ஏதாவது பேசுங்கப்பா என்று மைக்கை கொடுக்க அண்ணாமலை இவர்களின் நடனத்தை பாராட்டி பேசுகிறார் உடனே ரவி நீங்க திருப்பியும் ஆடுங்கமா என்று சொல்ல அங்கு இருப்பவர்கள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கத்த விஜயா மற்றும் பார்வதி டான்ஸ் ஆடுகின்றனர்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த சுருதியின் அம்மாவும் அப்பாவும் இதுக்கு மேல எங்க பங்க்ஷன் நடக்குமா என்று தெரியவில்லை. நம்ம பொண்ணு வேற இன்னும் காணோம் என்று எழுந்து ரவியிடம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூப்பிடுகிறார். ரவியிடம் ஸ்ருதி அப்பா என்ன கேட்கிறார்? அதற்கு ரவியின் பதில் என்ன? முத்துவும் மீனாவும் ஸ்ருதியைப் பார்த்தார்களா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 03-02-2025