Pushpa 2

அட்லி தயாரிப்பில் உருவாகிறது அடுத்த படம்; ஹீரோ விஜய் சேதுபதி..

இயக்குனர் அட்லி இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:

தமிழில் விஜய், சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ படம். இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி சுரேஷ், தமிழில் காட்டாத தனது கவர்ச்சியை அள்ளி வழங்கியிருந்தார்.

பேபி ஜான், இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில் அட்லி, ‘ என்னுடைய A6 படம் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இருக்கும். இந்தப் படத்திற்கு அதிகமான காலம் தேவைப்பட்டது. தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளன. இந்த படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையும்’ என்றார்.

மேலும், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து தான் படம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

 

atlee produce to join with hero vijay sethupathi
atlee produce to join with hero vijay sethupathi