திமுக தனது வாக்குகளை இழக்கும்: இயக்குனர் அமீர் கணிப்பு..
இயக்குனர் அமீர், அரசியல் மற்றும் பொது நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவ்வாறு விஜய் மற்றும் திமுக குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து காண்போம்..
விஜய் இப்போதுதான் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். இன்னும் மக்கள் பிரச்சினைகளை அவர் கையில் எடுத்து களத்திற்கு வரவில்லை. அப்படி இருக்கும்போது, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு இன்னும் முழுமையாக தெரியவில்லை.
டங்ஸ்டன் விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன? ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரத்தில் விஜய்யின் நிலைப்பாடு என்ன எனத் தெரிந்துகொண்ட பின்னர் தான், மக்கள் அவரை வரவேற்பது குறித்து முடிவெடுப்பார்கள்.
திமுக போன்ற கட்சி, மூன்றாம் தரப் பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, கருத்தினை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். ஒருவரின் தொழிலை இழிவுபடுத்திப் பேசுவதாலோ, ஆபாசமாக பேசுவதாலோ எவரையும் வீழ்த்திவிட முடியாது.
விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால், தி.மு.க.தான் தனது வாக்குகளை இழக்கும். அது தி.மு.க.வுக்குதான் பலவீனமாக அமையும்’ என கூறியுள்ளார்.
யாரும் எங்கேயும் எப்போதும் எதுவும் பேசுவதும் பாரத நாட்டில் கருத்து சுதந்திரம்தான்.!?