Pushpa 2

‘3 நாள் ஆச்சு, இந்த டாட்டூவை போட’: ஏ.ஆர்.ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினிதே பெருமிதம்..

பச்சை பச்சையாய் பேசாமல், பச்சை பச்சையாய் வரைந்திருக்கிறார் இசையழகி மோகினிதே. இந்நிகழ்வு குறித்து பார்ப்போம்..

ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினிதே, ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக பணியாற்றினாலும், வெளியில் தனது நண்பர்களுடன் இணைந்து கச்சேரிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். பாடல் பாடிக்கொண்டே பேஸ் கிட்டார் இசைப்பதில் வல்லவர் என பேர் பெற்றவர்.

இந்நிலையில், தற்போது தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதுவும் அவரது இரண்டு கால்களிலும் பச்சை குத்தியுள்ளார். அதாவது, அவரது இடது காலின் பக்கவாட்டில், தொடையில் ஆரம்பித்து பாதம் வரை, கடிகாரம், ஒரு புலி, ஒரு பூனை மற்றும் ஒரு ஆந்தை இருப்பதைப் போலவும், வலது காலின் பின் பகுதியில் தொடையில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரை வாள் இருப்பதைப்போல் பச்சை குத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது, ‘ஒருவழியாக நான் பச்சை குத்திக் கொண்டேன். அதுவும் நான் நினைத்ததைப் போலவே பச்சை குத்திக் கொண்டேன். அதற்காகவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இது மட்டும் இல்லாமல், இந்த டாட்டூவைக் நான் குத்திக் கொள்ள கிட்டத்தட்ட 20 முதல் 21 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டது.
மொத்தம் மூன்று நாட்கள் செலவு செய்து இந்த டாட்டூவை நான் போட்டுக் கொண்டுள்ளேன். நான் நினைத்ததை போலவே டாட்டூ போட்டு விட்டதற்காக நன்றி’ எனக் கூறியுள்ளார்.

இவரது இந்த டாட்டூ வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். காரணம் உடலில் இவ்வளவு பெரிய டாட்டூ ஒருவர் போட்டுக் கொண்டுள்ளது என்பது, குறிப்பாக அதனை மூன்று நாட்களில் தொடர்ந்து போட்டுக் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இவரது டாட்டூ வீடியோவை பார்த்த ரசிகர்கள், கமெண்ட் செக்‌ஷனில் ஹாட்டினையும், ஃபயர் எமோஜியையும் கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல், சிலர் இதனை பைத்தியகாரத்தனம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது கையில் கிட்டாரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஆக, ‘இச்சை முற்றிய நிலை, பச்சை பச்சையாய் தெரியும்.!

ar rahman bass guitarist mohini dey put tattoos goes trending
ar rahman bass guitarist mohini dey put tattoos goes trending