கவுரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Web Ads

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. க்ரிஷ் எழுதி இயக்கும் இப்படத்தில் கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கௌரி கிஷனின் முகத்தை மையப்படுத்தி, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ‘தாரகை’ படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Web Ad 2

சித்து குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார். அலன் பி. ஜான் படத்தொகுப்புப் பணிகளையும், அருண்சங்கர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டுள்ள ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் போன்ற முக்கிய அம்சங்களைப் பேசும் படமாக உருவாகி வருகிறது.

‘தாரகை’ — ஒரு பயணம்… ஒரு தேடல்… பல பெண்களின் பாதைகள்!