ரசிகர்கள் மீது அக்கறையாக இருப்பவர் அஜித்.. ஆரவ் நெகிழ்ச்சி..!
அஜித் குறித்து பேசி உள்ளார் நடிகர் ஆரவ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில், அஜித் சார் எப்போதும் ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பார். மக்கள் மீதும் ரசிகர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்த மாதிரியான ஒரு படம் கண்டிப்பாக வரவேற்பு பெரும் என்று அஜித் சொன்னார்.
அஜித் சாரின் ஒரு ரசிகரான நான் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது கடின உழைப்பை மக்கள் இந்த படத்தில் பார்ப்பார்கள். அஜித் சார் எப்போதும் ரசிகர்களை பற்றி பேசிக்கொண்டே இருப்பார் ரசிகர்கள் மீது அக்கறை கொள்வார் அதனாலயே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு மெசேஜை ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

