பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட். ரசிகர்கள் மகிழ்ச்சி..!
பராசக்தி படத்தின் சூட்டிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ் கே 23 என்ற படத்தில் நடித்த வருகிறார். மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் எஸ் கே 25 படத்திற்கு பராசக்தி என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
தற்போது பராசக்தி படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதில் இந்த படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
