Web Ads

‘காதல் மனைவியை மீட்கும் படலம்’ விடாமுயற்சி திரை விமர்சனம்

‘காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது விலையில்லா வாழ்க்கை. மண்ணோடு என்னுடம்பு மக்கிப் போயினும், உன்னோடுதான் என்னுள்ளம் உயிர்த்திருக்கும்’ என்ற அசைக்க முடியா ஆழவேர் நம்பிக்கை.

இந்தத் தேடலில்தான்.. காதலாய்க் கனன்று மூச்சடக்கிப் பயணித்து புரிய வைத்திருக்கின்றது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இது பற்றிய விமர்சனம் இங்கு காண்போம்..

அர்ஜுன் (அஜித்) – கயல் (திரிஷா) இருவரும் காதலித்து திருமணம் செய்து 12 வருடங்கள் மிக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அவசர வாழ்க்கையின் பொருளாதாரத் தேடல் இன்றியமையாதது தான். அதில், அன்பின் பகிர்வுகளில் குறைவு ஏற்படலாமோ? இத்தகு உணர்வுப்பூர்வ சிறு சிறு காரணங்களுக்காக ‘பிரிந்து விடுதல்’ எனும் முடிவுக்கு ஆட்படுதல் காதல் தம்பதியருக்கு சரியோ?

ஆம்.. அந்நிலையில் தான், கயல் அர்ஜுனிடம் விவாகரத்து கேட்கிறார். மனம் தடுமாறிய அர்ஜுனும் விவாகரத்து கொடுக்க முடிவெடுக்கிறார்.

அச்சூழலில் கயல், தன் அம்மா வீட்டுக்கு (அஜர்பைஜான்) செல்ல தீர்மானிக்கிறார். அர்ஜுன் தானே வந்து விடுவதாக சொல்கிறார். செல்லும் வழியில்…(அர்ஜுன்-ஆரவ்- ரெஜினா டீம்) மர்மக்கும்பலால் கயல் கடத்தப்படுகிறார். கடைசியில், கயலை அர்ஜுன் மீட்டாரா, இல்லையா? என்பதை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரில்லராய் விடாது தெறிக்க விட்டிருக்கிறது ‘தல’ யோட ஹைடெக் மூவி.!

படத்தில், முதல் ‘Way’யில் அர்ஜுன்- கயல் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ரொமான்டிக் சீன்ஸ் ரசிக்க வைக்கிறது. காலச்சுழற்சியில், இருவருக்குமான இல்லற வாழ்வில்.. கயலுக்குள் ஏன் இன்னொருவர் மீது ஈர்ப்பு வருகிறது என்பதையும் உளவியலாக காட்டியிருப்பது சிந்தனைக்குரிய சிறப்பு.

இரண்டாம் ‘Way’யில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட்டாக.. இறுதிவரை விறுவிறுகின்றது. மர்மக்கும்பல் கேட்கும் பெருந்தொகையை கொடுத்து மனைவியை மீட்க ரணகளமாய் விரைந்திருக்கிறார் அர்ஜுன். இதில் பஞ்சிங் டயலாக், குத்தாட்டம், காமெடி, ஐந்து சாங்ஸ், நூறு இருநூறு பேரை பந்தாடும் ஃபைட் சீன்ஸ் இல்லை. ஆனால், அலட்டிக் கொள்ளாத செம ஆக்சன் உண்டு.

அவ்வகையில் அயற்சி, அழுகை, சோகம், பதற்றம், ஆக்ரோஷம், வேகம், வெறித்தனம்.. என்பனவற்றை மிக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். இதேபோல் மாறுபட்ட கேரக்டரில் நிறைய அழகானவளாகவும் கொஞ்சம் ஆபத்தானவளாகவும் கலந்த நடிப்பில் எகிறி இருக்கிறார் திரிஷா.

எடுத்துக்கொண்ட கதையை திரைக்கதை ஆக்கிய விதத்தில், எவ்விதத்திலும் சமரசம் இல்லாது படமாக்கிய துணிவு, மகிழ் திருமேனியின் ‘குவாலிட்டியான சம்பவம்’ எனலாம்.

கலர் கலராய் ரீல் விடாமல், காட்சிக்கு வேண்டிய ரியலாட்டியாய் அஜர் பஜானை ஒளிப்பதிவாக்கிய ஓம் பிரகாஷ்க்கு.. ‘ஓ போடலாம்’ அப்படியொரு லொக்கேஷன் பியூட்டி. மேலும், ஒவ்வொரு சீனிலும் அனிருத்தின் பின்னணி இசை வெரைட்டியாய் வந்து வந்து அசத்தியிருக்கிறது.

அஜித்-திரிஷா இவர்களுடன், அர்ஜுன்- ஆரவ்-ரெஜினா கூட்டணியின் ஆக்டிங் அன்ட் டயலாக் டெலிவரியெல்லாம் ‘பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல’ ரொம்ப ஸ்மூத்தான மிரட்டல்; வில்லத்தனத்தில் தனி ரகம்.!

மொத்தத்தில், விடாமுயற்சி எடுத்து காதல் மனைவி கயலை மீட்டு விட்டார் அர்ஜுன். அந்த வகையில், அவருக்கு பண்டிகை தான். ஆனால், படம் பார்த்த ‘மங்காத்தா’ ஆர்வலர்களுக்கு ஏதோ பண்டிகை மாதிரிதான்ங்க.!

சுருக்கமா சொல்லனும்னா, பழைய ஒருவரிக் கதையில்.. செம எக்ஸெலென்ட் திரில்லர் மூவி, ஹெவி வொர்க்.. வெல்டன்.

ஆதலால்..விட்ராதீங்க, வித்தியாசத்தை நிச்சயம் ரசிப்பீங்க.!

60%
செம எக்ஸெலென்ட் திரில்லர் மூவி, ஹெவி வொர்க்.. வெல்டன்.

விடாமுயற்சி திரை விமர்சனம்

  • Rating