Web Ads

சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு ரகசியம்: நடப்போம் நலம் பெறுவோம்

அறிவும் அழகும் ஆராதனைக்குரியது தானே. அவ்வகையில் ஆரோக்கிய மேனி அவசியம். இப்ப..விஷயத்திற்கு வருவோம்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதில், அற்புதமாக நடித்த சாய்பல்லவிக்கு தேசிய விருது கிடைக்கலாம் எனவும் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சாய் பல்லவி, தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘தண்டேல்’ திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படம் 100 கோடி வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில், நாக சைதன்யா, சாய் பல்லவி பற்றிக் குறிப்பிடும்போது, ‘சாய் பல்லவி தினமும் 5 லிட்டர் இளநீர் குடிப்பார்’ என நகைச்சுவையாக கிண்டல் செய்தார். இதற்கு சிரித்தவாறு சாய் பல்லவி, ‘அவ்வளவு அதிகமாக இல்லை. இருப்பினும், சுமார் 2 லிட்டர் இளநீரை தவறாமல் உட்கொள்கிறேன்’ என தெளிவுபடுத்தினார்.

அதாவது சாய் பல்லவியின் நேச்சுரல் அழகு மற்றும் உடல் ஃபிட்னஸ், எனர்ஜிக்கு இதுவே முக்கிய காரணம்’ என கூறப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போதே, 2 லிட்டர் பாட்டிலில் இளநீருடன் தான் வருகிறார். தன்னுடைய நேச்சுரல் அழகை பராமரிக்க இன்னும் பல விஷங்களை சாய் பல்லவி சாப்பாட்டில் கடைப்பிடிக்கிறார்.

தனது டயட்டில், தினமும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார். குறிப்பாக, இரவு 9 மணிக்கு தூங்கி, அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவதை, மருத்துவக்கல்வி படித்த நாளிலிருந்து தொடங்கி, இன்றும் வழக்கமாகத் தொடர்கிறார்.

இது குறித்து இணையவாசிகள், ‘அடடா..அடிக்குற வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு செய்தி, இதன்படி நடப்போம், நலம் பெறுவோம்’ என தெரிவித்து வருகின்றனர்.

actress sai pallavi daily 2 liters coconut water in healthy practice
actress sai pallavi daily 2 liters coconut water in healthy practice