தனுஷின் ‘குபேரா’ படம் குறித்து, ராஷ்மிகா மந்தனா ஜில்லுன்னு ஒரு அப்டேட்
தனுஷின் 51-வது படமான ‘குபேரா’ பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வாங்க..
ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி ஹூரோயினியாக உயர்ந்திருக்கிறார். தற்போது, சல்மான் கானுடன் ஜோடியான ‘சிக்கந்தர்’ படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது.
மேலும், தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51-வது திரைப்படம் ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிந்து,
ஐதராபாத்தில் தொடர்கிறது. இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், ராஷ்மிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘குபேரா’ அப்டேட் கேட்ட ரசிகருக்கு ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார் அவர் அதில், ‘எனக்கு தெரிந்ததெல்லாம் ஜூன் 20-ம் தேதி ‘குபேரா’ ரிலீஸாகும் என்பது மட்டும்தான்.
இப்படம் வித்தியாசமானதாக இருக்கும் அதே வேளையில், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்’ என கூறியுள்ளார். காதல் கதையா? என்ற கேள்விக்கு, ‘காதல் இல்லாமல் நானில்லை’ என லவ் பன்ச் வைத்துள்ளார்.