‘ராக்கா’வில் இணையும் மின்னல் முரளி நாயகி: அல்லு அர்ஜுன் படத்தில் அதிரடி மாற்றங்கள்!

Web Ads

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்களைத் தேர்வு செய்து வரும் அட்லீ, தற்போது மலையாள திரையுலகின் இளம் நாயகி ஒருவரை இணைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராக்கா படத்தில் ஃபெமினா ஜார்ஜ்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘மின்னல் முரளி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஃபெமினா ஜார்ஜ், தற்போது ராக்கா படத்தில் இணைந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஃபெமினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மெயின் வில்லனாக ஜிம் சர்ப்

இப்படத்தின் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் இப்படத்தில் முதன்மை வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் கவனத்தை ஈர்த்த இவர், அட்லீயின் மேக்கிங்கில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக எத்தகைய வில்லத்தனத்தைக் காட்டப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.