அஜித் பிறந்த நாளன்று ‘பில்லா’ ரீரிலீஸ்!

Web Ads

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது!

தமிழ் திரையுலகின் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் திரில்லர்களில் ஒன்றாக கருதப்படும் ‘பில்லா’ திரைப்படம், நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்க, சசிகலா புரொடக்ஷன் மாநிலம் முழுவதும் வெளியீட்டை ஒருங்கிணைக்கிறது.

இன்றைய திரையரங்கு அனுபவத்திற்கேற்ப, 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடன் மற்றும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் படம் மீண்டும் வெளியிடப்படுவது ரசிகர்களில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

2007ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’, அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அவரது ஸ்டைல், கம்பீரமான ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் மாஸ் அபியரன்ஸ் ஆகியவை இந்தப் படத்தின் மூலம் புதிய அளவுக்கு சென்றன. இயக்குநர் விஷ்ணுவர்தன் கையாள்ந்த கதை சொல்லல், சர்வதேச தரத்திலான காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ‘பில்லா’வை இன்றும் பேசப்படும் படமாக வைத்திருக்கின்றன.

நயன்தாரா நடித்த வலுவான கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. மேலும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்தின் இன்னொரு பெரிய ஹைலைட். குறிப்பாக, ‘பில்லா’ தீம் மியூசிக் இன்றும் ரசிகர்களின் பிடித்த ரிங்டோனாக இருந்து வருகிறது.

ஸ்டைல், ஆக்‌ஷன், கதை சொல்லல் ஆகியவற்றின் சங்கமமாக உருவான ‘பில்லா’, தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரை புதிய கோணத்தில் எடுத்துக்காட்டிய படமாக கருதப்படுகிறது. இந்த மறுவெளியீடு, பழைய ரசிகர்களுக்கு நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பாகவும், புதிய தலைமுறைக்கு இந்த ஐகானிக் படத்தை பெரிய திரையில் அனுபவிக்க ஒரு சிறந்த சந்தர்ப்பமாகவும் அமைகிறது.

மே 1ஆம் தேதி வெளியாகும் இந்த ரீ-ரிலீஸ், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக உருவெடுத்து வரும் பி. ஆண்டனி தாஸ், தரமான கதைகள் மற்றும் புதிய முயற்சிகளை ஆதரித்து தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்து வருகிறார். சசிகலா புரொடக்ஷனின் தலைமை நிர்வாக அதிகாரி சலீம் ஜி. சிவா, 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் காட்சிப்பதிவு மற்றும் உயர் தர தயாரிப்பில் திறமையை வெளிப்படுத்தி நிறுவன வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறார்.