என்ன கொடுமை சார் இது: சமாதானம் பேச வந்த டைரக்டரை வெச்சு செஞ்ச டோனி ரசிகர்கள்

இடம் பொருள் ஏவல் அறிந்து வார்த்தை விடுதல் முக்கியம். அப்படி கவனமாய் பேசியும் களேபரமானால் என்ன சொல்வது. விஷயத்திற்கு வருவோம்..

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில், ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்தது. அதுவும் பிட்ச் சரியில்லை, அதனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். பின்பு, வெறும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றோம் பெரிய தோல்வி எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்தார்.

நேற்றிரவு நடந்த ஆட்டத்தினை பிரபலங்கள் பலரும் கணடு களித்தனர். அஜித் மனைவி ஷாலினி தனது மகனுடன் வந்திருந்தார். மேலும், ‘பிக்பாஸ்’ செளந்தர்யா என சீரியல் நடிகைகளும் கண்டு களித்தனர். இச்சூழலில், ஆர்சிபி ரசிகர்கள் சென்னை அணியை கலாய்த்து பேசி வருகின்றனர். ‘கொடுத்த பில்டப் எல்லாம் போச்சா’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதனிடையே என்னப்பா சென்னை டீம் ஒரு மேட்ச் தான தோத்திருக்கு. அதுக்கே இப்படி ஓவர் டோஸ் விடுறீங்க என திரெளபதி இயக்குநர் மோகன் ஜி பொங்கியிருக்கிறார். தனது எக்ஸ் தளத்தில் தல தோனியையும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில்,

பொதுவாக யாருக்கும் சண்டை இல்லாமல் சமாதானப்படுத்துவது போல், எப்போதும் ஒரு அணி வெற்றி பெற முடியாது. அதேமாதிரி சிறப்பாகவும் செயல்பட முடியாது. இதில் டோனி மட்டும் விதிவிலக்கா என்ன.

அணியின் வெற்றிக்காக தனியொரு ஆளாக டோனி மட்டுமே எப்போதும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. டோனி கிரிக்கெட் ஜாம்பவானாக இருக்கிறார். நேற்றைய நாள் ஆர்சிபிக்கானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’ என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் ‘நீ இறங்கி ஆடியிருந்தால் நொட்டியிருப்ப. வந்துட்டார்யா கருத்து சொல்ல’ என நெட்டிசன்கள் தாறுமாறாக மோகன் ஜியை கலாய்க்க தொடங்கிவிட்டனர். இது ஒரு பக்கம் இருக்க, என்னது மோகன் ஜியை கலாய்க்கிறீங்களே என அவரது ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக பேச தொடங்கியதால் ஒரு சாதாரண போஸ்ட் களேபரம் ஆகியுள்ளது.

மேலும் தொடர்ந்து, ‘வந்தோமா 4 படம் எடுத்தோமான்னு இல்லாம கருத்து சொல்ல வந்துட்டாரு’ என பங்கமாய் எகிற தொடங்கி விட்டனர்.

அதாவது நேற்றைய ஆட்டம் பற்றி, இயக்குனர் சமாதானமாய் ஒரு கருத்து சொல்ல வந்தவர் அவ்வளவுதான். அதற்கு இவர்கள் டென்ஷனுக்கு வடிவேலுபோல மாட்டிக்கொண்டார் திரௌபதி பட இயக்குனர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

ipl cricket rcb success and csk images 1200