Web Ads

நடிகர் சோனுசூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு: திரையுலகில் பரபரப்பு

சோனுசூட் மீதான பிடிவாரண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றம், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா கொடுத்த, ரூ.10 லட்சம் மோசடி வழக்கில் தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியக் குற்றவாளியாக மோஹித் சுக்லா, மற்றும் ரிஜிகா காயின்லா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதலீடு திட்டம் ஒன்றில், பணம் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டி இவர்கள் இந்த பண மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்த திட்டத்தின் விளம்ப தூதர் சோனு சூட் தான் என கூறியுள்ளனர்.

எனவே பணத்தை இழந்த, ராஜேஷ் கண்ணா சோனு சூட் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க சோனுசூட்டை நீதிமன்றம் அழைத்தும், அவர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்காததால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சோனு சூட்டைக் கைது செய்ய, மும்பை அந்தேரி வெஸ்ட்லவில் உள்ள ஓஷிவாரா காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு லூதியானா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது; ‘தனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. சம்பந்தமில்லாத விஷயத்தில் சாட்சி சொல்ல நீதிமன்றம் தன்னை அழைத்து உள்ளதாகவும், அந்த வழக்கில் தான் எனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிறுவனத்தின் அம்பாசிடர் நான் இல்லை என கூறிவிட்டேன். தன்னுடைய பெயரை சிலர் விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருப்பதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் பிப்ரவரி 10-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், சோனு சூட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருப்பதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது விளக்கத்தை கொடுப்பார்’ என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சோனுசூட் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கிறார். மேலும், அண்மையில் ஆந்திர மாநிலத்தில் சுகாதார பணிகளை மேம்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து நன்கொடை வழங்கியுள்ளார். இத்தகு காரணங்களால் அவர் மீதான பிடிவாரண்ட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

actor sonu sood arrest warrant and money laundering issue