Web Ads

சமந்தா உடனான விவாகரத்துக்கு காரணம் என்ன?: நாக சைதன்யா விளக்கம்

சமந்தா உடனான விவாகரத்துக்கு, நாக சைதன்யா மனம் திறந்து விளக்கம் அளித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..

4 ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு, சமந்தா உடனான விவாகரத்து குறித்து, இப்போது 2-வது திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நாக சைதன்யா-சமந்தா இருவரும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஹனிமூன், சினிமா என்று பிஸியாக இருந்த நிலையில்- 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படம் மூலமாக பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இச்சூழலில், நாக சைதன்யா- சாய் பல்லவி நடிப்பில் ‘தண்டேல்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் நிலையில், தற்போது சமந்தா உடனான விவாகரத்து குறித்து பேசிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், இந்த முடிவை எடுத்தோம். அதோடு ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறோம். தான் பிரிவதற்கு முன்பு 1000 முறை யோசித்து தான் இந்த முடிவை எடுத்தேன்.

இதற்கும் மேலாக என்ன விளக்கம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. இந்த முடிவுக்கு ரசிகர்களும், ஊடகங்களும் மதிப்பளிக்க வேண்டும். எங்களது முடிவில் தனி உரிமை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இருவரும் கருணையுடன் நகர்ந்து சென்றுவிட்டோம். இப்போது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கிறோம். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நாக சைதன்யா 2-வது திருமணம் செய்து கொண்ட நிலையில், சமந்தா இப்போது வரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்குநர் ராஜ் நிடிமோரு உடன் காதல் உறவில் இருப்பதாக கிசுகிசு பரவியது குறிப்பிடத்தக்கது.