‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினருக்கு, சிவகார்த்திகேயன் பாராட்டு..

‘படம், ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது’ என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக மாறியுள்ளது.
‘மில்லியன் டாலர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் இதுவரை வெளியான மூன்று படங்களையும் இயக்கியவர்கள் புதுமுக இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஃபார்முலாவில் சாதனை படைத்தது சூப்பர் குட் பிலிம்ஸ் என்பது நினைவுகூரத்தக்கது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் இடம் பெற்றுள்ள கதைக்களம், நகைச்சுவை, சென்டிமென்ட், காதல்,
என அனைத்து காட்சிகளும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படக்குழுவினரை தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். செம ரைட்டிங், நல்ல மேக்கிங், படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகழகாக வடிவமைத்து, எல்லோருடனும் கனெக்ட் செய்துவிட்டீர்கள். அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக இருந்தது. அனைவரும் மனதுக்கு மிகவும் நெருங்கியவர்களாக மாறிவிட்டார்கள்’ என படக் குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
இந்நிகழ்வில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் , ஒளிப்பதிவாளர், எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இது தொடர்பான நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தயாரிப்பு நிறுவனமும் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. முன்னதாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
