திரிஷாவுக்கு வாழ்த்தும், வைரமுத்துவுக்கு வருத்தமும்; ரசிகர்கள் பதிவுகள்..

Web Ads

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும், நூறு சாமிகள் இருந்தாலும், ஆராரி ராரோ நானிங்கு பாட’ என அவரவர் தங்கள் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை வலைதளங்களில் வெளியிட்டு, இன்று உலக அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அவ்வகையில், திரையுலக பிரபலங்கள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், தன் அம்மா உமாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு, சிறந்த அம்மா கிடைத்து ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார் திரிஷா.

அதை பார்த்த ரசிகர்களோ, ‘உங்கள் அம்மா மாதிரி ஒரு நல்ல அம்மா கிடைப்பது கஷ்டம். அம்மாவுக்கு எங்கள் சார்பில் வாழ்த்து சொல்லுங்கள்’ என தெரிவித்துள்ளனர்.

திரிஷாவின் திரைப் பயணம் சுமார் 25 ஆண்டுகளாக நல்லபடியாக செல்ல அவரின் அம்மா உமா ஒரு முக்கிய காரணம். மேலும், திரிஷாவின் மேனேஜராகவும் இருந்து வருகிறார் உமா. தன் மகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். மகளின் ஆதரவாக இருந்து வருகிறார்.

Web Ad 2

இச்சூழலில், திரிஷாவை நினைத்து சந்தோஷப்படும் சினிமா ரசிகர்கள், கவிப்பேரரசு வைரமுத்துவுக்காக வருத்தம் தெரிவித்தும் வருகிறார்கள்.

வைரமுத்துவின் அம்மா அங்கம்மாள் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு அன்னையர் தினமான இன்று மாலை வடுகப்பட்டியில் நடக்கிறது. எல்லோரும் அன்னையர் தினத்தை கொண்டாடும் இந்த நல்ல நாளில், தன் தாய்க்கு இறுதிச் சடங்கு செய்யும் நிலை வைரமுத்துவுக்கு.

கவிஞரே தைரியமாக இருங்கள். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். என்கிறார்கள் ரசிகர்கள். தன் அம்மாவின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அந்த துக்க செய்தியை அனைவருக்கும் தெரிவித்துள்ளார் வைரமுத்து.

‘என் தெய்வமே இது பொய் தூக்கமா?’ என்ற பாட்டு வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. துக்கம் நெஞ்சை கனக்கச் செய்கிறது கவிஞரே.!.

fans feel sorry for vairamuthu on mothers day
fans feel sorry for vairamuthu on mothers day