நான் வீல்சேரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள்.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் போன்ற பன்முக திறமை கொண்டவர் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன்,புது மனிதன், முத்து, பெரிய குடும்பம், அருணாச்சலம், அழகர்சாமி, கனவே கலையாதே, தை பொறந்தாச்சு, முகவரி, வல்லரசு ,பெண்ணின் மனதைத் தொட்டு போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
பெரும்பாலான படங்களில் அவரது வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் விரட்டி இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் பொன்னம்பலம் வீல் சேரில் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இதுகுறித்து பேசிய அவர் நான் வீல் சேரில் இருப்பதை பார்த்துவிட்டு என்னுடைய செயல்களை நேரடியாக பார்த்தது போல் பலரும் பல கதைகளை சொல்லுகின்றனர் என கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து மது குடிப்பேன் என்றும் சொல்லுகிறார்கள் ஆதாரம் இல்லாமல் சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் சிலர் ஏதேதோ பேச வேண்டும் என்று பேசுகிறார்கள் வெளியில் பேசும் கதைகளை கேட்பதற்கு எனக்கு டைம் இல்லை என அவரது பாணியில் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
