காதலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களா, பெண்களா?: ராஷ்மிகா விளக்கம்..

Web Ads

நேஷனல் க்ரஷ் என கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ளார். சமீபத்தில், புஷ்பா 2 மற்றும் சாவா படங்களின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றுள்ளார்.

தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் இந்தியிலும் கவனம் ஈர்த்துள்ளார். இந்தியில் ‘தம்மா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரில்லர் படம் நேற்று திரைக்கு திரைக்கு வந்தது.

மேலும், ராஷ்மிகா ‘தி கேர்ள்பிரெண்ட் ’என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் புரமோஷனின்போது ராஷ்மிகா ‘காதல் முறிவு’ குறித்து சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்தார். அவர் கூறுகையில்

‘காதல் முறிவால் பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்கள் வலியை வெளிப்படுத்த உங்களைப்போல தாடி வளர்க்க முடியாது. மது குடிக்க முடியாது. பெண்கள் உள்ளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், அதை வெளியே காட்ட முடியாது’ என்றார். இந்தக் கருத்துகள் தற்போது வைரலாகி உள்ளன. ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

women are the most affected by this rashmika mandanna
women are the most affected by this rashmika mandanna