சூது கவ்வும்-2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
மிர்ச்சி சிவா நடித்து வெளிவந்த ‘சூது கவ்வும்-2’ பட வசூல் நிலவரம் பற்றிப் பார்ப்போம்..
விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களால் புகழ் பெற்றார்.
மேலும், விஜய் சேதுபதியை ஒரு கெத்தான ரோலில் காட்டிய படம் சூது கவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தில் தயாரிப்பாளர் சி.வி. குமார், மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். படத்தை புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கியுள்ளார்.
கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திலும் கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று ரிலீஸாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படம், தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், சூது கவ்வும் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கி நிலையில், சூது கவ்வும் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரிலீஸான முதல் நாளில் வெறும் ரூ.45 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.
புஷ்பா 2 படத்தின் நேற்றைய வசூலை விட இது மிகவும் குறைவு. புஷ்பா 2 திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.35 கோடி வசூலித்து இருந்தது. ஆனால், சூது கவ்வும் 2 திரைப்படம் அதில் பாதிகூட வசூலிக்கவில்லை. இருப்பினும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரு நாட்களில் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூது கவ்வும் படத்தின் வசூல் நிலையைப் போலவே, சித்தார்த் நடித்த ‘மிஸ் யூ’ படமும் வசூலில் இருந்து மிஸ் ஆகியிருக்கிறது. கடும் மழை போனால் தான், வசூல் மழை வருமோ.!