’22 வருட சினிமா வாழ்க்கை நிறைவு’ கொண்டாட்டம்: திரிஷா கூறிய தத்துவ முத்து..
‘இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான்’ என தனது 22 ஆண்டு திரைப்பயண அனுபவத்தில் தத்துவ முத்து உதிர்த்துள்ளார் திரிஷா. இது குறித்து காண்போம்..
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44 ‘படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய ‘சூர்யா 45’ படத்தின் ஷூட்டிங்கிலும் சூர்யா இணைந்துள்ளார். ஆன்மீகமும் ஆக்சனும் கலந்த கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தில் சூர்யாவுடன் திரிஷா இணைந்துள்ளார்.
இப்படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே, பொள்ளாச்சியில் பூஜையுடன் துவங்கிய நிலையில், இன்று படத்தின் சூட்டிங்கில் திரிஷா இணைந்துள்ளார். திரிஷா சினிமாவிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை, நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், ‘சூர்யா 45’ படக்குழு இன்று திரிஷாவின் 22 ஆண்டுகால சினிமா பயணத்தை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதற்காக திரிஷாவிற்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்திருந்தனர். கேக் கட்டிங்கின்போது, ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்று திரிஷா கூறிய தத்துவ வாசகத்தை பார்க்க முடிந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக, சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த திரிஷா, தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற அனுபவ டயலாக் திரிஷாவிற்கு தற்போது சிறப்பாக பொருந்தியுள்ளது.
‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற திரிஷாவுக்கு, ‘திருமண வாழ்க்கை ஒரு வாட்டமோ.?’ என இணையவாசிகள் அன்புடன் கேள்விக்கணைகள் தொடுப்பதும் வைரலாகி வருகிறது.