சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனுடன் ராணா டகுபதி: இனிய நிகழ்வுகள்..
பாகுபலி, வேட்டையன் போன்ற படங்களில் வில்லனாக மாஸ் காட்டிய ராணா டகுபதி, இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு அல்லு அர்ஜுனை அவர் சந்திக்க சென்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன. இது குறித்த நிகழ்வுகள் பார்ப்போம்..
புஷ்பா-2 பட பிரீமியர் காட்சியின் கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் என குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஜாமின் வழங்கியது. பின்னர். இன்று காலை வீட்டுக்குத் திரும்பினார்.
பவன் கல்யாண், சிரஞ்சீவி, ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நேற்றே அல்லு அர்ஜுன் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இச்சூழலில், இன்று அவரை சந்தித்து ராணா டகுபதி ஆறுதல் தெரிவித்தார்.
ராணா டகுபதி வரும்போது அல்லு அர்ஜுன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அல்லு அர்ஜுனை தொந்தரவு செய்யக்கூடாது என ராணா டகுபதி விலகிச் செல்ல நினைக்கும்போது, அவரது கையை பிடித்தவாறே போன் பேசி முடித்த அல்லு அர்ஜுன், போன் பேசி முடித்ததும் கட்டியணைத்து வரவேற்ற காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்தது.
ராணா டகுபதிக்கு இன்று 40-வது பிறந்தநாள். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாட செல்லாமல், அல்லு அர்ஜுன் தான் முக்கியம் என காண வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய தேவரகொண்டா, நாக சைதன்யா என பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். சிறை அனுபவம் எப்படி இருந்தது என்றும் கிண்டலாக பேசிக் கொள்ளும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
சில நேரங்களில்.. வருத்தமான நிகழ்விலும், குறும்பு வார்த்தைகளால் நகைச்சுவையை ஊட்டி மகிழ்விப்பதும், இனிய நட்பின் இலக்கணம் தானே.!