சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விற்பனையில் சிக்கல்?

Web Ads

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் மற்ற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்பனையானாலும் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை மட்டும் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இப்படத்தில் ஹிந்தி திணிப்பு பற்றிய கதைக்களம்தான் என சொல்லப்படுகிறது.

ஹிந்தி திணிப்பு பற்றிய உண்மை சம்பவங்களை பேசும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக இருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகைக்கு இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்க யோசிப்பதாக கூறப்படுகிறது.

Web Ad 2

ஹிந்தி திணிப்பு பற்றிய இந்த பிரச்சனைகளை யாவும் சூர்யா முன்கூட்டியே கணித்ததால்தான் இப்படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

sivakarthikeyan film parasakthi broblems
sivakarthikeyan film parasakthi broblems