ரோகிணி கேட்ட கேள்வி, சீதாவின் காதலை ஏற்பாரா முத்து? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜை பார்த்து ரோகிணி கேள்வி கேட்க, சீதா மற்றும் அருணை பார்க்க முத்து மீனா வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் நாளைக்கு வேலை ஏதாவது இருக்கா என்று கேட்டுவிட்டு நம்மள சீதா கோயிலுக்கு வர சொல்லி இருக்கா என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நான் இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லல சீதா ஒரு பையனை விரும்புகிறார் என்கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கா அம்மா கிட்ட கூட ஒன்னும் சொல்லல நம்மள அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு சொல்லி இருக்கா என்று சொல்ல உடனே முத்து நம்ம சீதா வா என்று அதிர்ச்சியாகிறார் சரி அந்த பொண்ணுக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சு அதனால லவ் வந்திருக்கும் என்று சொல்லிவிட்டு பார்த்து பேசி இல்ல ஓகே அண்ணா முடிச்சிடலாம் என்று முடிவெடுக்கின்றனர் மறுபக்கம் விஜயா செயின் போட்டு ரசித்துக்கொண்டிருக்கிறார்.
ரோகினி கோபமாக டம்ளரை தட்டி விட அது மேல எதுக்கு கோபத்தை காட்டிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் வேற என்ன பண்ண சொல்ற இவ்வளவு பண்ணியும் உங்க அம்மாவோட கோபம் குறையல நான் என்ன பண்ண முடியும் நீயும் எதுவுமே பேச மாட்டேங்கிற நான் எவ்வளவு நாளைக்கு அசிங்கப்பட்டுக்கிட்டு இருக்க முடியும் என்று கேட்க அம்மாவோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா தான் புரியும் அதுவரைக்கும் நீ இது மாதிரி புடிச்சது எதுனா வாங்கி கொடு என்று சொன்னால் இதுவே நான் கடன் வாங்கி தான் வாங்கி கொடுத்தேன் இதுக்கு மேலயும் வாங்கி கொடுக்கணும்னா நான் என்ன பண்ண முடியும். நீ எனக்கு சப்போர்ட் பண்றதே கிடையாது என்று கோபப்பட அதற்கு மனோஜ் உன்ன புடிச்ச மருமகனு சொல்லி அவங்க தலையில தூக்கி வைத்து கொண்டாடுனாங்க அதை ஏத்துக்கிட்ட எல்லாத்தையும் சொல்ல எவ்வளவு நாளைக்கு மனோஜ் இப்படியே இருந்தா உங்க அம்மா பிரிச்சுடுவாங்க என்று சொல்ல அம்மா ஒரு நல்ல குணத்துல இருக்கும்போது நானே பேசுறேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதி வேலை ரிசைன் பண்ணிட்டியா என்று கேட்க, அப்படியெல்லாம் நினைச்ச மாதிரி பண்ண முடியாது என்று சொல்ல என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லுகிறார் நம்மளே தனியா ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ணிக்கலாம் என்று கேட்க நம்ம கிட்ட தான் இப்ப அவ்வளவு காசு இல்லையே என்று சொல்ல எங்க அப்பா கிட்ட சொன்னா பண்ணிடுவார் என்று சொல்ல அந்த மாதிரி தேவை இல்லை நான் கஷ்டப்பட்டு முன்னேறிப்பேன் என்று சொன்ன சரி என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு நான் என்னோட சேவிங்ஸ்ல இருக்கிறதெல்லாம் ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிற அதுல நீ செஃப்பா இரு உனக்கு என்னைக்கு என் மேல நம்பிக்கை வருதோ அன்னைக்கு நீ பார்ட்னர் என்று சொல்ல ரவி முதல்ல நீ ஆரம்பி அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். மறுபக்கம் அருண் கோவிலுக்கு வருகிறார்.
சீதா புடவை வந்திருப்பதை பார்த்து சூப்பரா இருக்க சீதா என்று சொல்லிவிட்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் முத்து மீனா காரில் வர பழக்கடையில் நிறுத்தி முத்து பழம் வாங்கிக்கலாம் முதல்முறையா மாப்பிள்ளை பார்க்கப் போறோம் என்று சொல்லி வாங்க என்ன பழம் வாங்குவது அவருக்கு பிடிச்சதை வாங்கிக்கலாம் என முடிவு பண்ணி சீதாவிற்கு ஃபோன் பண்ணி கேட்கச் சொன்ன சீதா அவர்களிடம் என்ன பழம் பிடிக்கும் என்று கேட்கிறார்.அவர் மாதுளம் பழம் என்று சொல்ல முத்து மாதுளம் பழம் வாங்குகிறார்.
பிறகு என்ன நடக்கிறது? சீதா என்ன சொல்லுகிறார்? அருண் என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
