முத்து கேட்ட கேள்வி, அண்ணாமலை சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து கேட்ட கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மாலையுடன் வந்து எல்லோரையும் கூப்பிட்டு மீனாவையும் கூப்பிட்டு நிறுத்தி அவருக்கு மாலை போடும்போது அனைவரையும் கைதட்ட சொல்லுகிறார். அதேபோல் முத்து மாலை போட்ட உடனே அனைவரும் கைத்தட்டுகின்றனர். என்ன விஷயம் என்று ரவியும் அண்ணாமலையும் கேட்க சொல்றேன் என்று சொல்லுகிறார்.
மீனா ஒரு சாதனை படைச்சி இருக்கா என்று சொல்ல என்ன சாதனை என்று அனைவரும் கேட்கின்றனர். டெகரேஷன் பண்ற இடத்துக்கு போகாமலேயே வெற்றிகரமா ஆர்டர் எடுத்து முடிச்சிருக்கா என்று சொல்ல அனைவரும் வாழ்த்து சொல்லுகின்றனர். அண்ணாமலை ஏன் போக முடியாமல் போச்சு என்று கேட்க அதற்கு முத்து அம்மாவுக்கு உடம்பு சரியாமா ஆயிடுச்சு அதனால அம்மாவையும் கவனிச்சிக்கிட்டு வீடியோ கால் மூலமா டெக்கரேஷன் வேலையும் பார்த்து முடிச்சிட்டா என்று சொல்ல அப்படியா என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே என்று அண்ணாமலை கேட்கிறார் உடனே ரோகினி உடம்பு சரியில்ல நான் என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லாட்டி என்று சொல்ல அனைவரும் விஜயா வழக்கமா வர வழி தான் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.
பிறகு இன்னைக்கு சிக்கன் மட்டன் ஏதாவது சமைக்கலாம் என்று முத்து மீனா விடம் கேட்க மீனா கிச்சனுக்கு அழைத்து சென்று முத்துவிடம் அவங்களுக்கு நிஜமாலுமே வலியல்லா இல்ல என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பாம இருக்கறதுக்கு அவங்க போட்ட பிளான் என்று சொல்லுகிறார் எப்படி சொல்ற என்று கேட்க அந்த சிந்தாமணியை இவர்களுக்கு தெரிஞ்சிருக்கு அவங்க கிட்ட நான் மீனாவ வெளியே போகாம பாத்துக்கிட்டேன் என்று சொன்னதை நான் கேட்டேன் என்று சொல்ல முத்து உடனே வெளியில் வந்து அனைவரும் முன்னிலையிலும் நடந்த விஷயத்தை சொல்லுகிறார்.
இதனால் அண்ணாமலை விஜயாவைப் பார்த்து உனக்கு எதுக்கு இந்த வேலை நீ அமைதியா இருக்கிறது பார்த்தாலே தெரியுது உன் மேல தான் தப்பு என்று இதுக்கு மேல இது மாதிரி எதுவும் பண்ணாத என்று சொல்ல விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். உடனே முத்து கையோட கைய நான் இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன் என்று சொல்லி டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கும் விஷயத்தை சொல்லுகிறார்.
அண்ணாமலை சந்தோஷம் ஏதாவது ஒரு தொழிலில் நானும் ஒரு தொழில் கையில் இருந்து கொண்டே இருக்கணும் நல்ல விஷயம் தான் செய்யுங்க என்று சொல்ல உடனே விஜயா நீங்க பகல ட்ரெயின் ஓட்டிட்டு நைட்ல பஸ் ஓட்டினீர்களா என்று கேட்கிறார். என் வேலை வேற நான் கவர்மெண்ட்ல வேலை செஞ்சேன் அதனால பிஎஃப் பென்ஷன் காசு எல்லாம் வரும் ஆனா முத்து அப்படி கிடையாது ஏதாவது வேலை செஞ்சா தான் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லி வாயை அடக்குகிறார். பிறகு முத்து ஒரு போர்டு வைக்கணும் பா என்று சொல்ல வைத்துப் போப்பா அதுக்கு என்ன என்று அண்ணாமலை சொல்லுகிறார் உடனே ரோகிணி போர்ட் வெச்சா கமர்ஷியல் ஆகிடுவாங்க கரண்ட் பில் அதிகமாக வரும் என்றெல்லாம் சொல்ல, உடனே விஜயா இது என்னோட வீடு நான் சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை இது என்னோட வீடும் கூடாதா என்று சொல்லி பேசுகிறார்.
பிறகு அனைவரும் கிளம்ப மீனா நீங்க இந்த விஷயத்தை பத்தி இப்ப பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல என்று சொல்ல நான் தான் கரெக்டான சந்தர்ப்பத்தில் பேசுவேன் என்று சொன்னேன்ல இப்ப அம்மா மேல பழி விழுந்திருக்கு இந்த டைம்ல அவங்க எது பேசினாலும் வேலைக்காகாது அதனால தான் சம்மதம் வாங்கிட்டேன் என்று சந்தோஷப்படுகிறார். மறுநாள் காலையில் முத்து பரபரப்பாக இங்கும் அங்கும் நடந்து கொண்டே இருக்க அண்ணாமலை மீனா அனைவரும் என்னை என்று கேட்டாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க சொல்லுகிறார். பிறகு பேங்கில் இருந்து ஒரு நபர் வர அவர் என்ன சொல்லுகிறார்?அவர் கொண்டு வந்தது என்ன? மீனாவின் ரியாக்ஷன் என்ன? குடும்பத்தினர் என சொல்லப் போகிறார்கள் ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
