கோலாகலமாக நடக்கப் போகும் எழில் படத்தின் ஆடியோ ரிலீஸ்., இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.!!
எட்டு மாதங்களுக்குப் பிறகு எழில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்க உள்ளது.

baakiyalakshimi serial today episode update 11-02-25
தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி இடம் கோர்ட்டில் நடந்த விஷயங்கள் பற்றி பேசி கண்கலங்குகிறார். அன்றைக்கு நான் பாக்யாவுக்கு பண்ண துரோகம் தான் இன்னைக்கு எனக்கு நடந்திருக்கு. ராதிகா என்ன வேணான்னு தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டா அந்த இடத்துல பாக்யா ராதிகாவை பார்க்க வந்த போது எனக்கு பாக்யாவை அவ வெள்ளந்தி மனச ஏமாத்தி டைவர்ஸ் வாங்க கூட்டிட்டு வந்தது தான் ஞாபகம் வந்தது எல்லாமே நான் பண்ண கர்மா என்னை வந்து சேர்ந்திடுச்சு என்று சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார்.
பிறகு நான் ரூமுக்கு போறமா? என்று சொல்லிவிட்டு சென்றுவிட ஈஸ்வரி ராமமூர்த்தி போட்டோவின் முன் வந்து நின்று நம்ம பையன் பாக்கியாவிற்கு பண்ண துரோகத்தை உணர வேண்டும் என்று சொன்னிங்கள ஆனா இப்ப அவன் எல்லா தப்பையும் உணர்ந்துட்டான் பாக்யாவுடன் நல்ல மனச புரிஞ்சுகிட்டா இது நடக்காம இருந்திருந்தா பாக்கியா இதுக்கு மேல இருக்குற பழைய வெறுப்போட தான் வாழ்ந்திருப்பான் ஆனால் இப்போ அவன் மனசார மாறி இருக்கா கண்டிப்பா நான் பாக்யாவையோ கோபியையும் சேர்த்து வெப்ப சேர்த்து வச்சுட்டு தான் உங்க கூட வருவேன் இது சத்தியம் என்று சொல்லுகிறார்.
உடனே 8 மாதங்களுக்குப் பிறகு என்று போட்டு விட்டு.. பாக்கியா புதிய சேலை கட்டிக்கொண்டு ரெடியாகி கொண்டிருக்க இனிய வந்து இன்னைக்கு சூப்பரா இருக்கமா என்று சொல்ல நீயும் தான் சூப்பரா இருக்கா என்று சொல்லி இரண்டு பேரும் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். இன்னைக்கு என்ன இவ்வளவு அழகா இருக்க என்று கேட்க என்னோட பையனோட ஆடியோ ரிலீஸ் நான் இப்படி ரெடி ஆகலை எல்லாம் எப்படி என்று கேட்கிறார் ஆடியோ ரிலீஸ்க்கே இப்படின்னா அப்ப படம் ரிலீஸ் ஆனா எப்படி என்று கேட்க அதுக்கெல்லாம் வேற மாதிரி ரெடியாவேன் என்று சொல்லிவிட்டு இருவரும் கீழே வருகின்றனர். இனியா செல்பி எடுத்து யாருக்கோ அனுப்ப இருவரும் சேட் பண்ணி சிரிக்கின்றனர். கோபியும் ஈஸ்வரியும் உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி செழியன் வந்துட்டானா என்று கேட்கிறார். ஆடியோ ரிலீஸ் ல சவுண்ட் அதிகமா இருக்கும்னு குழந்தையை வேணான்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரி குழந்தைகளை பாக்கணும் போல இருக்கு என்று சொல்லுகிறார் உடனே கோபி அதுக்கு என்னமா ஃபங்ஷன் முடிஞ்ச உடனே ஜெனியோ குழந்தைகளையும் பார்த்துட்டு வந்துடலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர்.
சரி டைம் ஆயிடுச்சு நம்ம கிளம்பலாம் என்று கோபி ஈஸ்வரி இனியா மூவரும் காரில் கிளம்ப செல்வியும் பாக்யாவும் வேறொரு காருக்கு வெயிட் பண்ணிக் கொண்டிருக்க பாக்யா தெருவில் இருப்பவர்களிடம் எழில் ஆடியோ ரிலீஸ் வந்துடுங்க வந்துடுங்க என்று கூப்பிட்டு சொல்ல செல்வி அதுதான் முதலில் சொல்லிட்டேன் சொல்லிட்டு இருக்க அவங்க வந்தா மட்டும் என்ன கண்ணு தான் வைப்பாங்க என்று சொல்ல அதற்கு பாக்யா அதுக்குள்ள செல்வி என் பையன் படம் பண்ண மாட்டான் அதுக்கு வாய்ப்பே இல்லை அவன் ஆசைக்கெல்லாம் காத்துக்கொண்டிருக்க முடியுமா வேற வேலை வெட்டிக்கு போக சொல்லு அப்படின்னு சொன்ன எல்லாருமே அவனோட சக்சஸ பாக்கணும் அதனால்தான் என்று சொல்ல சரி பார்க்க போகலாம் என்று கிளம்புகின்றனர்.
மறுபக்கம் ஆடியோ ரிலீஸ் ஏற்பாடுகள் சூப்பராக இருக்க, பெயரில் அமிர்தா நிலா பாப்பாவுடன் பங்கு இருக்கிறார் அனைவரும் வர தொடங்க ப்ரொடியூசர் சொன்ன டைம்ல ஆரம்பிச்சிடலாம் எழில் என்று சொல்ல உங்க வீட்ல இருந்து வந்துட்டாங்களா என்று கேட்கிறார் எல்லாரும் இன்னும் ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துல வந்துருவாங்க என்று சொல்ல சரி அப்படின்னா கோபியும் வருவார் இல்ல என்று கேட்கிறார் கண்டிப்பா வருவாரு என்று சொல்லிவிட்டு எழில் வருகிறார். அமிர்தா வேலையை பார்த்துக் கொண்டிருக்க என்ன விஷயம் எதுக்கு அப்படி பார்த்துகிட்டு இருக்க என்று சொல்ல முதல்ல நீங்க படத்தை பத்தி நிறைய விஷயம் பேசுவீங்க ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய பிரச்சனை சண்டை படத்தை பத்தி பேசறதே இல்ல வேற வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சிடுவீங்க எங்க என்னால உங்களுடன் கனவு வீணா போயிடும்னு நினைச்சேன் என்று சொல்ல அதற்கு எழில் அமிர்தாவின் கையை பிடித்து இதற்கான பதிலை நான் ஸ்டேஜ் சொல்றேன் என்று சொல்லுகிறார்.
பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர என்ன பேசிக் கொள்கின்றனர் ?கோபியிடம் எழில் என்ன பேசுகிறார்? என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 11-02-25