திருமண புகைப்படங்களை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு.. குவியும் லைக்ஸ்!!
திருமண புகைப்படங்கள் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2 ,பென்குயின், அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து இருந்தார். அவர்களின் திருமணமும் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது திருமண கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் “இதயம் ரெண்டும் இசையெனவே இன்றே இன்றே இணைகிறதே, நட்பே காதல் துனையனேவே காலமெல்லாம் வருகிறதே” என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram