நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ர.கார்த்திக், தற்போது தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான ‘கிங் 100 – KING 100’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமான பான் இந்திய நடிகர் நாகார்ஜுனா, தனது திரையுலக பயணத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள 100வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இளம் தலைமுறை இயக்குநர் ர.கார்த்திக் இயக்குகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர்.

நாகார்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிங் 100’ படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான க்ளிம்ப்ஸில் நாகார்ஜுனாவின் மாஸ் திரைத் தோற்றம், கம்பீரமான திரை ஆளுமை மற்றும் மிரட்டலான காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக, நாகார்ஜுனாவின் 100வது படத்திற்காக இயக்குநர் ர.கார்த்திக் வடிவமைத்துள்ள காட்சிகளும், வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
நாகார்ஜுனாவின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ள இந்த க்ளிம்ப்ஸை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ர.கார்த்திக் – நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகும் ‘கிங் 100’ திரைப்படம் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.