பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!

Web Ads

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களைக் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. திரைப்படம் செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.

மிடில் ஏஜ் ஆணுக்கும் கல்லூரி மாணவிக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதை டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் உருவாகும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தின் பார்வை என பல்வேறு அம்சங்களை சுவாரஸ்யமான முறையில் டிரெய்லர் முன்வைக்கிறது.

வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் டிரெய்லர் காட்சிகள் அமைந்துள்ளன.

இப்படத்தை ‘பிரேமலு’ புகழ் கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார். கிரண் ஜோசியுடன் இணைந்து அவர் கதையை எழுதியுள்ளார். திலீஷ் போத்தன், ஃபஹத் பாசில் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Web Ad 2

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், சங்கீத் பிரதாப், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ரோஷன் ஷனவாஸ், ஷ்யாம் மோகன், ஸ்ரீந்தா, பார்வதி அய்யப்பதாஸ், மீனாட்சி ரவீந்திரன், பிந்து பணிக்கர், வெட்டுக்கிளி பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஜய் இசையமைக்க, அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பாவனா ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் Future RunUp Films வழங்கி விநியோகிக்கிறது. Primark Productions நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

மலையாளத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தமிழில் வெளியாகவுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் பேசும் இப்படம், செப்டம்பர் 4-ஆம் தேதி தமிழ் திரையரங்குகளில் வெளியாகிறது.