ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

Web Ads

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரமான திரையிருப்பு, உற்சாகமான நடனம் மற்றும் எனர்ஜி நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக களமிறங்குகிறார்.

இதனை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள ‘டைகரியன் ரோர்’ பாடல், தொடக்கம் முதலே பிரம்மாண்டமான காட்சிகள், துடிப்பான இசை மற்றும் வசீகரிக்கும் நடனத்துடன் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் ஹிருது ஹரூனின் எனர்ஜி கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

டைனமிக் பெர்கஷன் இசையும், பல்வேறு இசைக்கருவிகளின் பயன்பாடும் பாடலின் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரித்துள்ளன. ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா. ராஜா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ளனர்.

Web Ad 2

செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ள ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தை யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.பி. நந்து கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

‘டைகரியன் ரோர்’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த முதல் சிங்கிள் மூலம் படத்தின் இசை புரமோஷனும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.