‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் அனிருத்!

Web Ads

சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி எந்தவிதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சிலம்பரசன் TR உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Web Ad 2

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூட்டணி இணைந்திருப்பது ‘அரசன்’ படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பால், ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.