கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய விஜயா, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ரோகினி.

siragadikka asai serial today episode update 26-03-25
siragadikka asai serial today episode update 26-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு விஜயா கோபப்பட்டு ரோகிணியை பிடித்துத் தள்ள அண்ணாமலை இப்ப எதுக்கு இவ்வளவு கோவப்படுற அவ என்னமோ சொல்ல வர கேப்போம் என்று சொல்ல அதற்கு விஜயா இதுக்கு மேல அவ எதுவும் சொல்லத் தேவையில்லை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார். ஆனால் ரோகினி நான் சொல்றதை கேளுங்க என்று சொல்லி கெஞ்சியும் விஜயா கேட்க விருப்பம் இல்லாததால் மீனா வந்து அவங்க சொல்றது கேப்போம் அத்தை என்று சொல்ல நீ எதுவும் சொல்ல வேணாம் என்று அதட்டி அமைதியாகி விடுகிறார். உடனே ரோகிணி நான் இங்கிருந்து போக மாட்டேன் இது என்னோட வீடு என்று சொல்லி அண்ணாமலை இடம் நீங்கள் ஆச்சு சொல்லுங்க என்று சொல்ல விஜயா அவரை பேச விடாமல் இருக்கிறார்.

உடனே ரோகினி மனோஜிடம் நீ சொல்லு மனோஜ் என்று மனோஜின் கையை அழுது கொண்டே பிடித்து பேச விஜயா ரோகினியின் கையை தட்டி விட்டு அவன் கூட உனக்கு என்னடி பேச்சு என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நீ இந்த வீட்ல இருக்க கூடாது என்று ரோகினியின் ஹேண்ட்பேக்கை காலில் எட்டு உதைத்து விட்டு கதவை சாத்தி விடுகிறார். அண்ணாமலை நீ இப்ப எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க அவ பண்ணது தப்புனா நீ பண்றது அதைவிட பெரிய தப்பு அவ என்னத்துக்காக இப்படி பண்ணான்னு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்ல அதற்கு அவ பண்ணதே நம்பிக்கை துரோகம் அதுவும் இல்லாம எவனையோ கூட்டிட்டு வந்து நடிச்சு ஏமாத்தி எவ்வளவு பண்ணி இருக்கா இதுவரைக்கும் நம்ம ஏமாந்தது போதாதா இதுக்கு அப்புறம் ஏமாற நான் தயாராக இல்லை என்று சொல்ல அண்ணாமலை மனோஜிடம் நீ போய் ரோகிணியை கூட்டிட்டு வா அவ என்ன காரணத்துக்காக தெரிஞ்சுப்போம் என்று சொன்ன மனோஜ் விஜயாவை பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்கிறார்.

அண்ணாமலை வற்புறுத்தி போக சொல்ல விஜயா மனோஜ் ரூமுக்கு போக சொல்லுகிறார் உடனே மனோஜ் ரூமுக்கு சென்று விடுகிறார். வீட்டை விட்டு வெளியே வந்த ரோகினி நேராக வித்யா வீட்டிற்கு போக அவர் என்னடி இப்படி வந்திருக்க தலை கூட வராமல் என்று ரூமுக்கு சென்று சீப்பு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ரோகினி சீப்பை தூக்கி வீசி அடிக்கிறார். என்னடி ஆச்சு ஏதாவது பிரச்சனையா காபி எடுத்துட்டு வரவா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டு, பிரவுன் மணி வந்து சொன்ன விஷயத்தையும், வீட்டில் நடந்த பிரச்சனையையும் வித்யாவிடம் சொல்லுகிறார்.

நீ எதை மறைக்கணும்னு நினைச்சியோ அது தெரிஞ்சுடுச்சு அதுவும் இல்லாம உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க நல்லவங்களை எவ்வளவு நாள் ஏமாத்த முடியும் என்று வித்தியா சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு பத்திரிகை எடுத்து வந்து கொடுக்க இந்த பத்திரிக்கையா பாரு என்று சொல்ல இந்த பத்திரிக்கை எப்படி உனக்கு வந்துச்சு என்று கேட்கிறார். பிரவுன் மணி வந்து என்னோட தங்கச்சி பையனுக்கு கல்யாணம் நீயும் ரோகினி பாப்பாவும் வந்துருங்க என்று சொல்லி கொடுத்துட்டு போனாரு நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் என்று சொன்ன ரோகினி கோபப்படுகிறார்.

இது மட்டும் நீ முன்னாடியே சொல்லி இருந்தா கண்டிப்பா நான் இந்த பிரச்சனையை சரி பண்ணி இருப்பேன் என்று சொல்ல அதற்கு வித்தியா மறந்துட்டேன் என்று சொல்லுகிறார் அது மட்டும் இல்லாம விஷயம் தெரிஞ்சு இருந்தா நீ போய் இருக்க மாட்ட ஆனா உன் குடும்பம் உன்னை கல்யாணத்துக்கு போய் இருப்பேன் என்று சொல்ல அந்த பிரவுன் மணியை நான் அந்த கல்யாணம் வீட்டில் விட்டு இருக்க மாட்டேன் என ரோகினி சொல்லுகிறார் ஆனால் வித்யா அது அவரோட தங்கச்சி பையன் கல்யாணம் அவர் எப்படி இல்லாம இருப்பார் என்று சொல்ல நான் ஏதாவது பிளான் பண்ணி இருப்பேன் என்று சொல்லுகிறார். மனோஜ் எதுவும் சொல்லலையா என்று கேட்க அவன் எதுவும் சொல்லல உங்க அம்மா வீட்டை விட்டு அனுப்பும் போது அமைதியா நின்னு பாத்துட்டு இருந்தான் என்று சொல்லுகிறார் இப்ப என்ன பண்ண போற என்று கேட்க நான் இதுக்கு மேல அழ மாட்டேன் கஷ்டப்பட மாட்டேன் இது நான் தேர்ந்தெடுத்து கிட்ட வாழ்க்கை கண்டிப்பா இதை நான் சரி பண்ணுவேன் என்று தைரியத்தோடு பேசுகிறார் என் மாமியார் எல்லாம் எப்படி பேசலாம் ஆனா என் மாமனார் ரொம்ப நல்லவரு அவர் குடும்பம் ஒன்னா இருக்கணும்னு தான் நினைப்பாரு நான் வீட்டுக்குள்ள போய்ட்டா மட்டும் போதும் மனோஜ் என் வழிக்கு கொண்டு வந்துருவேன் என்று சொல்ல ஆனால் உன் மாமியார் இப்ப நீ பணக்காரில தெரிஞ்சதும் உன் மேல கோவப்படுவார்களே என்று சொல்ல மீனாவவிட என்ன கீழ தான் பாப்பாங்க ஆனா இந்த பிரச்சனை எல்லாம் நான் வீட்டுக்குள்ள போனா சரி பண்ணி விடுவேன் என உறுதியாக நம்புகிறார்.

மறுபக்கம் முத்துவும், மீனாவும் நடந்த விஷயத்தை நினைத்து சோகமாக உக்காந்து கொண்டு இருக்க மனோஜ் தான் இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் என்று முத்து சொல்லுகிறார். பிறகு மனோஜ் தண்ணி குடிக்க வர அண்ணாமலை என்ன சொல்லுகிறார்?அதற்கு மனோஜின் முடிவு என்ன? முத்து,மீனா என்ன சொல்லுகிறார்கள்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 26-03-25
siragadikka asai serial today episode update 26-03-25