ரிப்போட்டர் வேலையில் சேர்ந்த இனியா, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியா வேலையில் சேர கோபி வாழ்த்து சொல்லி உள்ளார்.

baakiyalakshimi serial today episode update
baakiyalakshimi serial today episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹாலில் ஈஸ்வரி மற்றும் கோபி உட்கார்ந்திருக்க இனியா எழில் பாக்யா மூவரும் ரெஸ்டாரன்டில் இருந்து வந்தவுடன் அவர்களை நிற்க வைத்து இனியாவிடம் எங்கே போய்ட்டு வர என்று கேட்க ரெஸ்டாரண்டுக்கு என்று சொல்லுகிறார் அதுக்கு முன்னாடி எங்க போயிருந்த என்று கேட்க எழில் நான்தான் இனியாவ கூட்டிட்டு போனேன் என்று சொல்ல வீட்டில் இருப்பவர்கள் எழிலிடம் கோபப்படுகின்றனர் அவர் சொன்னா அவளுக்கு நீ புத்திமதி தான் சொல்லி இருக்கணும் அதுக்கு எதுக்கு அவளை கூட்டிட்டு போகணும் என்று கேட்க,உடனே ஈஸ்வரி இதெல்லாம் உனக்கு தெரியுமா பாக்யா என்று கேட்கிறார்.

அவங்க அங்க போயிட்டு ரெஸ்டாரண்டுக்கு தான் வந்தாங்க என்கிட்ட இல்ல உண்மைய சொன்னாங்க என்று சொல்ல அப்ப இது உனக்கு இது தப்பா தெரியலையா என்று கேட்கிறார் இதுல என்ன தப்பா தெரியுது இருக்கு என்று சொல்ல அந்த ஆகாஷோட அப்பா வந்து என் பையனே அமைதியா இருக்கான். உங்க வீட்டு உன்னால அமைதியா இருக்க முடியாதா என்று எவ்வளவு அசிங்கமா பேசிட்டு போனா தெரியுமா என்று கேட்கிறார். உடனே கோபி இனியாவிடம் உன்னோட நல்லதுக்கு தான் இனி ஆனா சொல்றேன் உனக்காக தான் நான் இந்த வீட்டுக்கு வந்தேன் என்றெல்லாம் பேச நீங்க ஏன் டாடி என்னால வந்தேன்னு சொல்றீங்க பாட்டி கூப்பிட்டதால் தான் வந்தீங்க நான் உங்களை கூப்பிடவே இல்லையே என்று சொல்ல கோபி மற்றும் ஈஸ்வரி அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே ஈஸ்வரி உங்களுக்கு என்ன செஞ்சாலும் உங்களுக்கு தெரியாது அம்மா பின்னாடியே ஓடுவாங்க நாங்க வீட்டை விட்டுப் போக முடிவு பண்ணிட்டோம் இந்த விஷயத்தை கேட்டுட்டு போக தான் இருந்தோம் வா கோபி கிளம்பலாம் என்று சொல்ல, பாக்கியா அத்தை என்று சொல்ல அதற்கு நீ கால்ல விழுந்து கெஞ்சினாலும் நான் போகாம இருக்க மாட்டேன் என்று சொல்ல மாத்திரை எடுத்துட்டு போங்க என்று சொல்ல மீண்டும் ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். இருவரும் பேக்குடன் வெளியே வர இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகின்றனர்.

சில மாதங்களுக்குப் பிறகு என சொல்லிவிட்டு, வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிட பாக்யா பூஜை செய்கிறார் இனியா அம்மாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்துல பாதி முடிச்சிட்டேன் நல்லபடியா மார்க் வாங்கி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டேன் அதே மாதிரி இந்த இன்டர்வியூல எனக்கு வேலை கிடைச்சுட்டா என்னோட முழு சத்தியத்தையும் நான் காப்பாத்திடுவேன் என்று மனதில் நினைக்கிறார். சாமி கும்பிட்ட பிறகு எல்லோரும் மீனாவிற்கு ஆல் தி பெஸ்ட் சொல்ல நீ இன்டர்வியூல செலக்ட் ஆயிடுவ என்று அனைவரும் சொல்லுகின்றனர்.

பாக்யா உங்க அப்பா கிட்டையும் பாட்டி கிட்டயும் சொல்லிட்டியா என்று கேட்க இல்லம்மா செலக்ட் ஆய்ட்டு சொல்லிக்கிறேன் என்று சொல்ல, எதுல போற என்று எழில் கேட்க ஸ்கூட்டில போய்க்கிற என்று சொல்கிறார் பத்திரமா போயிடுவியா என்று கேட்க நான் ரிப்போர்ட்டர் ஆயிட்டேனா டெய்லியும் வெளியே ஸ்கூட்டிலதான போய் ஆகணும் அதனால நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் பிறகு பாக்யா வெளியில் வந்து வழி அனுப்பவை பார்த்து அப்படியே நிற்கிறார் என்னம அப்படி பார்க்கிறா என்று கேட்க இப்பதான் உன்ன சின்ன வயசுல ஸ்கூல் போய் விட்ட மாதிரி இருக்கு என்று சொல்ல, ரொம்ப தேங்க்ஸ்மா இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று சொல்ல என்னோட கடமையை தான் நான் செஞ்ச என்று சொன்னவுடன் இனிய பாக்யாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு ரிப்போர்ட்டராதா இந்த வீட்டுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க இனிய வீட்டுக்கு வருகிறார். உள்ளே வரவைத்து விசாரித்துக் கொண்டிருக்க கோபி வருகிறார். என்ன விஷயம் இனியா ஏதாவது உன் பிரண்ட பாக்க வந்து இங்க வந்தியா என்று கேட்க இல்லப்பா உங்கள பாக்க தான் வந்தேன் என்று ஸ்வீட் கொடுக்கிறார். என்ன விஷயம் கல்யாணத்துல உங்க அம்மா எதுனா முடிவெடுத்து இருக்காளா என்று ஈஸ்வரி கேட்க அதெல்லாம் இல்ல எனக்கு ஒரு நியூஸ் சேனல் ரிப்போர்டரா வேலை கிடைச்சிருக்கு என்று சொல்ல கோபி சந்தோஷம் என சொல்லி ஸ்வீட் சாப்பிடுகின்றனர். ஈஸ்வரி நல்லா வேலை தானே என்று நல்ல கேட்க நல்ல வேலைதாமா என்று கோபி சொல்லுகிறார். என்னை இனியா எதுவுமே சொல்லல இது உன்னோட சாய்ஸ் தானா இன்டர்வியூ கூட சொல்லல என்று கேட்கிறார்.

வேலை கிடைச்சதும் சொல்லலாம்னு இருந்தேன் டாடி என்று சொல்லுகிறார். சரி நான் கிளம்புறேன் டாடி டைம் ஆகுது நானும் வீட்ல யாருக்கும் சொல்லல எனக்காக காத்துகிட்டு இருப்பாங்க என்று சொல்ல வீட்ல இருக்குறவங்களுக்கு இன்டர்வியூ போனது தெரியுமா என்று கேட்க எல்லாருக்கும் தெரியும் டாடி என்று சொல்லி விட்டு கிளம்புகிறார். பிறகு கோபி ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுத்து கொண்டு இருக்க கோபியின் நண்பர் செந்தில் வருகிறார்.

அவர் கோபியிடம் என்ன பேசுகிறார்? அதற்கு கோபி பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update
baakiyalakshimi serial today episode update