Web Ads

சூர்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் சுரேகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ad 2

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு உள் ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today episode update 26-03-25

moondru mudichu serial today episode update 26-03-25

நேற்றைய எபிசோடில் வெளியில் அனைவரும் கதவைத் தட்ட சுரேகா பாத்ரூமில் அர்ஜுனை இருக்க சொல்லிவிட்டு கதவை திறக்கிறார். உள்ள யார் இருக்கா என்று கேட்க யாரும் இல்லை என்று சொல்ல உடனே சூர்யா சென்று பாத்ரூமில் தேடி அவனை அடித்து இழுத்து வருகிறார். பிறகு அவன் முகத்தை பார்த்த பிறகு நீ காலேஜ் படிக்கிறவன் அல்ல என்று சொல்லி எத்தனை தடவை உனக்கு நான் வார்னிங் கொடுத்து இருக்கேன் என்று வெளியில் இழுத்து வருகிறார். உடனே சுந்தரவல்லி யாரும் இல்லை என்று சொன்ன என்று கேட்க என் பிரண்டுதாமா விஷ் பண்ண வந்தான் என்று சொல்ல விஷ் பண்ண வந்தா நேர் வழியில் வர வேண்டியதுதானே என்று சுந்தரவள்ளியின் தோழி கேட்க நான் உன்ன மாதிரி உன் பொண்ணு டிசண்டா இருப்பானு பார்த்தா ஒரு பையன ரூம் வரைக்கும் கூட்டிட்டு வந்து இருக்கா சரி வாடா போலாம் என்று அங்கிருந்து அழைத்து சென்று விடுகிறார் இதனால் ஃபங்ஷனுக்கு வந்தவர்களும் பேச சுந்தரவல்லி அவர்களை அனுப்பி வைத்து விடுகிறார் உடனே சுரேகா சுந்தரவள்ளியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அதற்கு சுந்தரவல்லி சுரேகாவை எழுந்திருக்க சொல்லி கன்னத்தில் அறைகிறார். சுரேகா மாதவி மற்றும் அருணாச்சலத்திடம் கெஞ்சி மன்னிப்பு கேட்டும் அவர்கள் மன்னிக்க சம்மதிக்காததால் சுரேகா நந்தினி மீது கோபத்துடன் சென்று விடுகிறார்.

சுரேகா ரூமில் தனியாக இருக்க இதை பயன்படுத்திக் கொண்ட ரேணுகா, நான் நந்தினி கிட்ட அப்பவே சொன்ன அது சுரேகா அம்மாவோட பிரண்டு என்று ஆனா அவங்க கேட்காம எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்டாங்க என்று சொல்லி மாத்தி சொல்லுகிறார். உங்களை வேணும்னே மாற்றி விட தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்ல சுரேகா நீ போ என்று சொல்லி இன்னும் நந்தினி மீது அதிகம் கோபப்பட்டு இவளை இனிமே சும்மா விடக்கூடாது என்று டென்ஷன் ஆகிறார். மறுபக்கம் மினிஸ்டரிடம் மினிஸ்டர் மனைவி ஒரே ஒரு பொண்ண பெத்து வச்சிருக்கான் அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு பத்தி நீங்க யோசிக்க மாட்டீங்களா என்று கேட்கிறார். அதற்கு மினிஸ்டர் நான் அஞ்சு வருஷத்த பத்தி யோசிப்பேன் ஆனா என் பொண்ணு 50 வருஷத்தை பத்தி யோசிப்பா என்று சொல்ல ரூமில் பாட்டு சத்தம் அதிகமாக கேட்க இருவரும் கதவை திறந்து பார்க்க அர்ச்சனா குடித்துக்கொண்டே டான்ஸ் ஆடுகிறார்.

உடனே மினிஸ்டர் என்ன ஆச்சும்மா என்று கேட்க, நான் நினைக்கிறது எல்லாமே நடக்குதுபா கூடிய சீக்கிரம் என் சூர்யா எனக்கு கிடைக்கப் போறான். அந்த நாள் ரொம்ப சீக்கிரமா வந்துடுச்சு என்று சொல்ல அர்ச்சனா அம்மா கடுப்பாகிறார். நந்தினிக்கு சப்போட்டா அந்த வீட்ல இருக்கிறவங்க எல்லாரையும் காலி பண்ணிட்ட, கூடிய சீக்கிரம் அவளாவே அந்த வீட்டை விட்டு போயிடுவா என்று சந்தோஷமாக சொல்ல, அந்த சூர்யா உன்ன பொன்னாவே மதிக்க மாட்டான் அதுக்கு இந்த ஆள் உனக்கு ஒத்து ஊதிக்கிட்டு இருக்காரு என்று கோபப்பட அதற்கு அர்ச்சனா முதல்ல இந்த பொம்பளைய டைவர்ஸ் பண்ணுப்பா என்று கோபப்படுகிறார். அதற்கு மினிஸ்டர் நீ என்ன பண்ணாலும் சரியா தான் பண்ணுவ அதுக்காக நீ என்ன வேணா பண்ணு நீ உன் ரூட்ல போய்கிட்டே இரு ஆல் த பெஸ்ட் என்று சொல்லிவிட்டு சென்று விட அர்ச்சனா மீண்டும் பாட்டு போட்டு டான்ஸ் ஆடுகிறார்.

மறுபக்கம் நந்தினி அதுவும் நான் இப்படி பண்ணிட்டேனே நான் கொஞ்சம் அமைதியா இருந்திருக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்க அருணாச்சலம் வருகிறார். தூக்கம் வரலையா இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்க என்று கேட்க ஆமாய்யா நான் தப்பா புரிஞ்சுகிட்டு ஒரு விஷயத்தை இப்படிக்கு கெடுத்துட்டேன். எல்லாரும் தப்பா பேச நானும் ஒரு காரணமாயிட்டேன் என்று சொல்ல அருணாச்சலம் விடுமா இதுல உன் தப்பு ஒன்னும் கிடையாது யாரோ ஒரு பையன் வீட்ல எகிறி குதிச்சு வந்தா இப்படித்தான் நினைப்பாங்க என்று சொல்ல, ஆமாங்கய்யா நானும் அப்படித்தான் நினைச்சேன் ஏற்கனவே வீட்டுக்குள்ள திருடன் வந்து இருக்காங்க அதனாலதான் நான் கொஞ்சம் பதட்டப்பட்டுட்டேன் என்று சொல்லுகிறார்.அதற்கு அருணாச்சலம் அப்படிப் பார்த்தால் சுரேகா அந்தப் பையனை வீட்டுக்குள்ள வர வச்சது தப்பு எல்லாரும் இருக்கும்போது முறையா வர வச்சிருக்கணும் ரூமுக்குள்ள கூட்டிட்டு போனது தான் பிரச்சனை என்று சொல்ல இருந்தாலும் நான் கொஞ்சம் நிதானமாய் யோசித்து இருக்கனும் ரூம் கதவை பூட்டுறதுக்கு முன்னாடி சுரேகா அம்மா கிட்ட கேட்டிருக்கணும் நான் திருடன் என்று நினைத்ததால் எதுவும் யோசிக்க முடியாத போயிருச்சு என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் அதைவிடுமா நீ போய் தூங்கு என்று சொல்லுகிறார்.

இல்லங்க ஐயா பிறந்த நாள் அதுவும் இது மாதிரி ஆயிடுச்சு இனிமே அவங்க மனசுல இது எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கோம்ல என்று கேட்கிறார். அதெல்லாம் நினைச்சு நீ வருத்தப்படாதம்மா நிஜமாவே நீ அவளை அசிங்கப்படுத்தணும்னு நினைச்சிருந்தா அது தப்பு ஆனா அப்படியெல்லாம் இல்ல இல்ல என்று சொல்லுகிறார். இருந்தாலும் சுரேகா அம்மா ரொம்ப சின்ன பொண்ணு எல்லாரும் முன்னாடியே இப்படி அசிங்கமா ஆயிடுச்சுன்னு நினைப்பாங்க இல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறது தான் சரியா இருக்கும் என்று சொல்ல அதெல்லாம் வேணாம் நந்தினி ரெண்டு நாள்ல சரியா போயிடும் என்று சொல்ல அவங்களுக்காக இல்லனாலும் எனக்காக மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும் இல்லனா என்னால தூங்க முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் சுரேகா பதட்டமாக இருக்க மாதவி வந்தவுடன் நெஜமாவே அவன் என்னோட பிரண்டு தான் என்று சொல்ல நானே ஒரு நிமிஷம் திடீர்னு ரூம்ல பார்த்த உடனே என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்ல, எல்லாரும் வெளிய பாத்து இருந்தா தெரிஞ்சிருக்காது ரூமுக்குள்ள இருந்ததுனால தான் தப்பா ஆயிடுச்சு என்று சொல்ல அதற்கு சுரேகா ஏற்கனவே என் ஃப்ரெண்டுன்னு ரேணுகா கிட்ட சொல்லி இருக்கேன் ரேணுகாவும் நந்தினி கிட்ட சொல்லி இருக்கா அவ வேணுமே அப்படி பண்ணி இருக்கா அந்த பையன் பாவம் என்று சொல்லி மாதவியிடம் வருத்தப்படுகிறார்.

அந்த நேரம் பார்த்து நந்தினி ரூமுக்குள் வந்து எல்லாம் என் தப்பு தான் என்னை மன்னிச்சுடுங்க ஏற்கனவே திருடங்க வந்திருக்காங்க அதனால தான் நான் இப்படி தப்பா நினைச்சுட்டேன் என்று சொல்ல உடனே சுரேகா அன்னைக்கு எங்க மாமாவ மாட்டி விட கிப்ட் பாக்ஸ மாத்தி கொடுத்த இப்போ என்னை இப்படி மாட்டி விட்டு இருக்க இவ்வளவு நாளா இந்த வீட்டில எனக்கு நடக்காத அசிங்கம் உன்னால நடந்திருக்கு. என்னோட அப்பா அம்மா அண்ணன் பிரண்ட்ஸ் என்று எல்லாரும் முன்னாடியும் என்ன அசிங்கப்படுத்திட்ட இல்ல இங்க இருந்து வெளியே போ என்று ரூமை விட்டு துரத்தி விட்டு என் மூஞ்சிலேயே முழிக்காத என்று சொல்லி அனுப்ப மாதவி சரி இவ தான் காரணம்னு தெரிஞ்சிருச்சில்ல வா நம்ப அம்மாவை போய் சமாதானம் படுத்தலாம் என்று அழைத்து செல்கிறார்.

நந்தினி கடவுளிடம் என்னால சுரேகா அம்மாவுக்கு அவமானம் ஆயிடுச்சு. எப்படியாவது அவங்க மனச மாத்தணும் அதுக்கு நீ தான் உதவி பண்ணனும் என்று போட்டோ எதிரில் உட்கார்ந்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நான் நெனச்சது எல்லாம் நடக்குதுனா நீ அந்த வீட்ல இருக்குறது தான் முக்கியம் என்று அர்ச்சனா ரேணுகாவிடம் சொல்லுகிறார். சூர்யா சுரேகாவிடம் உன் முன்னாடியே வரக்கூடாதுன்னு சொல்லி வான் பண்ணவன் எப்படி வீட்டுக்குள்ள வந்தா என்று கேட்க திடீர்னு என்ன பொறுப்பான அந்த மாதிரி பேசுறான் என்று சுரேகா நினைக்கிறார்.

அந்தப் பையன் ரூமுக்குள்ள போனத கண்ணால கூட பாக்கல அவன் செவரு ஏறி குதித்ததை தான் பார்த்தேன் அதை வச்சு திருடன்னு நெனச்சிட்டேன் அது தான் நான் பண்ண தப்பு என்று கல்யாணத்திடம் நந்தினி சொல்ல ரேணுகா பக்கத்தில் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 26-03-25

moondru mudichu serial today episode update 26-03-25