படங்களில் நடித்த கதாபாத்திரம் மிகவும் முக்கியம் : நித்யா மேனன் ஓபன் டாக்..!
படங்களில் நடிப்பது குறித்து பேசி உள்ளார் நித்யா மேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
இந்தப் படம் ஃபிலிம் ஃபேர் விருது பெற்றது அனைவரும் அறிந்ததே அதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை பபடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தை தேர்வு செய்வது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்க மாட்டேன். அந்த கதாபாத்திரம் எனக்கு மகிழ்ச்சி தந்தால் மட்டுமே அதை தேர்வு செய்வேன் இது மட்டும் இல்லாமல் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் படத்தில் கதை சரியில்லை என்றால் நடிக்க மாட்டேன் சிறிய பட்ஜெட்டில் நல்ல கதாபாத்திரமிருந்தால் கூட தயங்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.