Pushpa 2

புஷ்பா-2 படம், எக்ஸ்ட்ரா 20 நிமிட காட்சிகளுடன் ஓடிடி.யில் ரிலீஸ்; முழு விவரம்..

சுகுமார் இயக்கிய ‘புஷ்பா-2’ ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல் காண்போம்..

அல்லு-ராஷ்மி அலப்பறையில் ‘புஷ்பா- 2’ திரைப்படம், முதல் நாளில், பாக்ஸ் ஆபீஸில் ரூ. 294 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது.

பின்னர், படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடி வசூல் செய்து, இந்திய சினிமா வரலாற்றில் மெகா சாதனை படைத்த நிலையில்,11 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா தி ரூல் படம், ரூ. 1300 கோடி வசூல் செய்தது. இப்படம் உலக அளவில் 1800 கோடியை வாரி வழங்கியுள்ளது.

தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஜனவரி 30 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, இப்படம் தியேட்டரில் பார்த்ததை விட, படம் 3 மணிநேர 44 நிமிடமாக இருக்கும். இதில், பிரத்யேக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து பல மொழிகளில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், படத்தில் அந்த 20 நிமிட புதிய காட்சிகளை கண்டு களிக்க ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.