விஜய் சேதுபதி நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது; விவரம்..
விஜய் சேதுபதி நடித்த 3 படங்கள் நடப்பு ஆண்டிலேயே ரிலீஸாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த விவரம் காண்போம்..
தமிழ் சினிமாவில் தனித்துவம் பெற்ற முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படத்திலும் பிஸியாகி வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதி, கலைப்புலி எஸ்.தாணுவின் வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார். இத்தகைய பிஸியில் ‘கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். நித்யா மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில இந்த மூன்று படங்களும் கோடை கால விடுமுறையை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
